உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வாயில் கவ்வி வைத்திருந்த மீன் தொண்டைக்குள் புகுந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் இறந்தார்.கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளம் புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ், 24. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் துாண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த ஒரு மீனை வாயில் கவ்வி வைத்திருந்தார்.திடீரென்று மீன் துடித்து, அவரது தொண்டைக்குள் சென்றது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த ஆதர்ஷை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆதர்ஷ் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krishnamurthy Venkatesan
மார் 04, 2025 13:49

அவனுடைய மரணம் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்ட ஓன்று. மீன் என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


surya dhandabani
மார் 04, 2025 10:43

இந்த நிகழ்வை போகும் பொழுது ..எப்படி மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது .


R.P.Anand
மார் 04, 2025 10:24

பல மீன்கள் தப்பி பிழைத்து உள்ளது


baala
மார் 04, 2025 09:32

என்ன சொல்லுவது இதை பற்றி. விதி என்பதா


Krishnan
மார் 04, 2025 05:13

விதி யாரை விட்டது. விபரீத விளையாட்டு விபத்தில் முடிந்தது.


kalyan
மார் 04, 2025 04:57

எப்படி மீனை தன்னை அறியாமலே மூச்சுத்திணற வைத்து பலியாக்க நினைத்தாரோ அப்படியே அதே நீரின் செயலால் அவரே மூச்சுத் திணறி பலியாகி விட்டார். தன் வினை தன்னைச்சுடும்


தாமரை மலர்கிறது
மார் 04, 2025 02:44

செலஃபீ எடுக்க ஆசைப்பட்டு, பலியாகிவிட்டார்.


சமீபத்திய செய்தி