உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் பலாஹ் பல்கலையில் 10 பேர் மாயம்!

அல் பலாஹ் பல்கலையில் 10 பேர் மாயம்!

புதுடில்லி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய சோதனையில், அல் பலாஹ் மருத்துவமனையில் இருந்து 3 காஷ்மீர் டாக்டர்கள் உட்பட 10 பேர் காணவில்லை என கூறப்படுகிறது.டில்லியில் கடந்த 10ம் தேதி கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டி வந்த ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபியும் உயிரிழந்தான்.அன்றைய தினம் காலையில், ஹரியானாவின் பரிதாபாதில், 3,000 கிலோ வெடி பொருட்களுடன், அங்கு செயல்படும் அல் பலாஹ் பல்கலை பேராசிரியரும், டாக்டருமான முஸாம்மில் கனி, அவரது தோழி ஷாஹீன் சயீத் ஆகியோர் கைதான நிலையில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இந்த பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவங்களில் பலர் அல் பலாஹ் பல்கலையுடன் தொடர்பு உள்ளதால் அந்த நிறுவனம் விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. அப்பல்கலையின் நிறுவனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்நிலையில், சமீபத்தில் இப்பல்கலையில் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு பணியாற்றியவர்கள் அல்லது படித்தவர்கள் என 3 காஷ்மீரி டாக்டர்கள் உட்பட 10 பேர் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் மொபைல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் டில்லி தற்கொலைப்படை தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை