மேலும் செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார்!
3 hour(s) ago | 1
கிராமப்புறங்களில் ரோபோட்டிக் கல்வி: குஜராத்தில் தீவிரம்
5 hour(s) ago
பெங்களூரு : 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை, கூடுதலாக 10 சதவீதம் இலவசமாக வழங்க, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. முக்கியமான, 30 விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எம்.எல்.சி., இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:l கர்நாடக மின் வாரியங்களில், 4,430 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. இதற்கு அரசு உத்தரவாதம் அளித்த தீர்மானம்l 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை, கூடுதலாக 10 சதவீதம் இலவசமாக வழங்க முடிவுl அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட, மாணவர்களுக்கு உதவும் வகையில் கால் சென்டர் அமைக்கப்படும்l 20 ஆண்டுகளாக தலித்களின் உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 101 உட்பிரிவுகள் உள்ளன. இவற்றிற்கு பார்லிமென்ட் மூலம் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதால், மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய ஒப்புதல்l ஷிவமொகாவில் உள்ள சுதந்திர பூங்காவிற்கு, அல்லம பிரபு என்றும்; பெலகாவியின் கித்துார் பகுதி, சென்னம்மா கித்துார் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்l சாலை வரியை குறைக்கவும்; பழைய வாகனங்களை ஸ்கிராப்பிற்கு போடும் உரிமையாளர்களுக்கும்; புதிய எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கும் மானியம் வழங்க முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு மடாதிபதிகள், அமைப்புகள், அமைச்சர்கள் என பல தரப்பிலும், கர்நாடக கலாசார தலைவராக பசவண்ணரை அறிவிக்கும்படி அரசை வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஒருமனதாக கர்நாடக கலாசார தலைவராக பசவண்ணர் தேர்வு செய்யப்பட்டார். அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.
3 hour(s) ago | 1
5 hour(s) ago