உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி-20 மாநாட்டின் போது 16 லட்சம் சைபர் தாக்குதல் முறியடிப்பு

ஜி-20 மாநாட்டின் போது 16 லட்சம் சைபர் தாக்குதல் முறியடிப்பு

புதுடில்லி: கடந்தாண்டு நடந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டின் போது ஜி-20 போர்ட்டல் மீது நிமிடத்திற்கு 16 லட்சம் சைபர் தாக்குதல் நடந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இருநாட்கள் நடந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் கேள்விக்கு ஒன்றிற்கு பதிலளித்ததாவது, ஜி-20 உச்சிமாநாட்டின் போது ஜி-20 போர்டெல் மீது நிமிடத்திற்கு 16 லட்சம் தாக்குதல்கள் பதிவாகின. மேலும் வலைத்தளம் தொடங்கப்பட்ட உடனேயே தொடங்கியது , தொடர்ந்து தாக்குதல்கள் உச்சத்தை எட்டின. எனினும் இந்திய சைபர் செக்யூட்டி அமைப்பின் உதவியுடன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு, இணையதளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NicoleThomson
ஜன 04, 2024 12:49

வாழ்த்துக்கள்


ராஜா
ஜன 04, 2024 06:03

பூனையை மடியில் கட்டி சகுனம் பார்ப்பது போன்றது காங்கிரசை வைத்திருப்பது.


Sankar Ramu
ஜன 04, 2024 03:55

வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி