உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒண்ணா, ரெண்டா, 16 ஆயிரம் கோடியப்பு! அள்ளிக்கொடுக்குது யூடியூப்; ஆட்டக்காரர்கள் காட்டில் அடைமழை!

ஒண்ணா, ரெண்டா, 16 ஆயிரம் கோடியப்பு! அள்ளிக்கொடுக்குது யூடியூப்; ஆட்டக்காரர்கள் காட்டில் அடைமழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யூடியூப் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த வீடியோ கிரியேட்டர்களுக்கு ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அளித்துள்ளது.யூடியூப் பயன்பாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கோடிக்கணக்கான பேர் தினமும் யூடியூபில் வெளியாகும் வீடியோக்களை பார்வையிடுகின்றனர். லட்சக்கணக்கான பேர், தினமும் அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

ரூ.16,000 கோடி வருமானம்

இந்திய யூடியூப் கிரியேட்டர்கள் 7,50,000 பேர், 16,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர். இந்திய யூடியூபர்களின் வீடியோக்களில் 15 சதவீதம் பார்வையாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, யூடியூப் வீடியோ கிரியேட்டர்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

AI

பல்வேறு வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி தருகிறது. என்ன தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தாலும், மனித மூளைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்று யூடியூப் நிறுவன சி.இ.ஓ., நீல் மோகன், 51, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.V. Iyer
ஆக 08, 2024 17:06

எப்பூடியெல்லாம் சம்பாதிக்கிறாய்ங்க இவைங்க. இப்படிக்கொடுத்தால் எவன் வேலை செய்வான்?


AaaAaaEee
ஆக 08, 2024 13:55

அப்போ கூகுல் காரன் எவ்வளவு சம்பாதிப்பான் ?


Ramarajpd
ஆக 08, 2024 11:32

data recharge செய்யும் மனிதர்களின் பணம் தான் அது. நெட்வொர்க் கொடுக்கும் நிறுவனங்களுக்கு ஒரு பங்கு(jio), YouTube க்கு ஒரு பங்கு மற்றும் யூடூப் சேனல் வைத்து பார்வை கிடைப்பதை பொருத்து பணம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 350க்கு recharge செய்யும் கோடிக்கணக்கான வர்களின் பணம் தான் அது. YouTube ன் பணம் இல்லை ??


Muga Kannadi
ஆக 08, 2024 16:01

அப்போ யூடுப் வீடியோவ பாக்கறதுக்கு ஆச படர அப்போ உனக்கு பங்கு இல்லையா...? நீ பேசாம காட்ல இருக்கலாம்ல இல்ல ?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி