ஓராண்டில் மட்டும் சாலை விபத்தில் உயிரிழந்தோர் 1.77 லட்சம் பேர்: நிதின் கட்கரி வேதனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில், 2024ம் ஆண்டு சாலை விபத்து இறப்புகளில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்துள்ளனர் என பார்லிமென்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் சாலை விபத்துக்கள் தொடர்பாக, நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 2030ம் ஆண்டுக்குள் சாலைப் போக்குவரத்து இறப்புகள் மற்றும் காயங்கள் அடைவோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த் ஆண்டில் மட்டும் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,62,825 பேர் காயம் அடைந்து உள்ளனர். நாட்டில் சாலைப் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.