உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

காரைக்கால்:காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதி மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 18 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கு எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 18 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசைப்படகு மற்றும் படகில் உள்ள ஜி.பி.எஸ்.,கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை