மேலும் செய்திகள்
ரேஷனில் கேழ்வரகு மாவு புதுவை முதல்வர் அறிவிப்பு
17 minutes ago
டில்லியில் அடல் உணவகம்: 2நாளில் 33 ஆயிரம் பேர் வருகை
3 hour(s) ago
ஸ்டாலினை உருது பேச சொல்வீர்களா?: மெஹபூபா முப்தி
4 hour(s) ago | 1
மூணாறு: சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலை சென்ற தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். கரூர் பாலாஜி 43, உட்பட 5 பக்தர்கள் சத்திரம், புல்மேடு காட்டுப் பாதை வழியாக நேற்று சபரிமலை சென்றனர். சத்திரத்தில் இருந்து 500 மீட்டர் காட்டிற்குள் சென்றதும் பாலாஜிக்கு திடிரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். சுகாதாரம், வனம் ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக தெரியவந்தது. அதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பக்தர்கள் 14 பேர் காட்டுப்பாதையில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். சீதாகுளம் பகுதியில் சென்றபோது, அக்குழுவைச் சேர்ந்த ராக்குமாருக்கு 52, திடிரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு சுகாதார துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். வண்டிபெரியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
17 minutes ago
3 hour(s) ago
4 hour(s) ago | 1