உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 92 வயது ஒய்வு பெற்ற டாக்டரிடம் ரூ.2.2 கோடி மோசடி: சைபர் குற்றவாளிகள் 2 பேர் கைது

92 வயது ஒய்வு பெற்ற டாக்டரிடம் ரூ.2.2 கோடி மோசடி: சைபர் குற்றவாளிகள் 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரை, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, ரூ.2.2 கோடி மோசடி செய்த இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.கடந்த மார்ச் 12ம் தேதி, டில்லியை சேர்ந்த 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டவர்களிடமிருந்து பல வீடியோ அழைப்புகள் வந்துள்ளது. அவர் மீது எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டி உள்ளனர்.டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரை வெளியே எங்கும் செல்ல முடியாமல் அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர்.தொடர்ச்சியான மிரட்டல் வீடியோ அழைப்புகள் மூலம், போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, போலியான வீடியோ கான்பரன்ஸ் முறையிலான நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க கட்டாயப்படுத்தினர். இதனால் பயந்து போன அவர், அதை நம்பி, தனது அனைத்து டெபாசிட் தொகைகளை, மோசடி செய்பவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். தான் ரூ.2.2 கோடி பணத்தை இழந்த பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து டில்லி போலீசின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய சைபர் குற்றத்தடுப்பு துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் திவாரி கூறியதாவது: விரிவான கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல்-தடம் பகுப்பாய்வுக்குப் பிறகு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அமித் சர்மா என்ற ராகுல் கைது செய்யப்பட்டான். அவனது கூட்டாளி ஹரி ஸ்வர்கியாரி அசாமின் குவஹாத்தியில் இருந்து கைது செய்யப்பட்டான். இவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற குற்றவியல் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து செயல்படக்கூடியவர்கள் உட்பட கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.இவ்வாறு ஹேமந்த் திவாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Subramanian
மே 17, 2025 06:47

ரிசர்வ் வங்கியும் , சைபர் காவல்துறையும் எவ்வளவு முறை இந்த கைதுகள் நடைமுறை யில் இல்லை ஏமாறாதீர்கள் என்று குறுந்தகவல் அனுப்பியும் இவர்கள் ஏமாறுகிறார்கள். குடும்பத்தினரையோ நண்பர்களையோ கலந்தாலோசிக்காமல் இப்படி செய்யலாமா. முடிந்தவரை நமது அழைப்பில் உள்ள எண்களைத்தவிர மற்ற எண் அழைப்புகளை எடுக்காமல் இருப்பதே சிறந்தது.


Kasimani Baskaran
மே 16, 2025 04:05

வங்கிகள் எப்படி அவ்வளவு தொகையை எளிதாக மாற்ற விட்டார்கள்?


D.Ambujavalli
மே 16, 2025 03:19

நன்கு படித்த டாக்டர், சைபர் க்ரைம் போலீசிடம் என் செல்லவில்லை? ஒருவேளை தான் வேறு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்ற அச்சம் காரணமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை