உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்

24 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லி - சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் 24 மணி நேரம் தாமதமானது. மேலும், விமானத்தில் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கமடைந்தனர். இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது.தலைநகர் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று (மே 30) மாலை 3:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்ப இருந்தது. சுமார் 200 பயணிகள் விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், 6 மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் கிளம்பாது என அறிவிக்கப்பட்டது. மேலும், இரவு 8:00 மணிக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 7:20 மணியளவில் அந்த விமானத்தில், பயணிகள் சென்ற நிலையில், விமானத்தில் ஏசி செயல்படவில்லை. அதில், வயதானவர்கள் , குழந்தைகள் இருந்ததால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விமானத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள் விமான நிலையத்தின் வாயில் திறக்கப்படும் வரை ஓடுதளத்தில் காத்திருந்தனர். பிறகு விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விமானத்திலும், விமான நிலையத்திலும் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில், பயணிகள் புகைப்படங்களுடன் பகிர துவங்கினர்.இதனையடுத்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், விமானம் தாமதம், கடுமையான வெப்பத்தில் பயணிகள் காக்க வைக்கப்பட்டது, விமானத்தில் ஏசி செயல்படாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளதுடன், இது குறித்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

s. viswanathan
ஜூன் 01, 2024 10:00

டெல்லி வந்த ஏர் இந்தியா விமானமும் 5 மணி நேரம் தாமதமக வந்தது ரன் வாயில் ஒரு மணி நேரம் நின்று விமானத்தில் சூடு கிளம்பியது. டாடா மிக நல்லவர் ஆனால் அவர் குழுமத்தில் இருப்பவர்கள் மனித நேயம் இல்லாதவர்கள்


அம்பலவாணன்
மே 31, 2024 20:31

என்னவோ டாட்டா ந்னா பெரிய திறமையானதுன்னு நினைச்சுட்டிருந்தேன். அதுங்களும் தத்திகள்தான்.


Sathyanarayanan Sathyasekaren
மே 31, 2024 20:56

டாடா விடம் வந்தாலும் இன்னும் இடஒதுக்கீட்டில் வந்த அரசாங்க உத்யோகஸ்தர்கள் மாறவில்லை, கான் ஸ்கேன் காங்கிரஸ் காலத்தில் கமிஷன் அடிக்க வாங்கப்பட்ட விமானங்கள்.


ஆரூர் ரங்
மே 31, 2024 20:18

அரதப் பழசு விமானங்களை டாடாவின் தலைல கட்டி விட்டார்கள். பாவம்.


இறைவி
மே 31, 2024 18:15

முன்னொரு காலத்தில் நம்மிடம் இருந்த நிறுவனம் என்ற விருப்பத்தில் ஆகாத போகாத விமானங்களையும் அதைவிட அரசு வேலை என்ற போதையில் வேலை நிறுத்தம் செய்யவே பழகிய தொழிலாளர் குழுமத்தை கடனுக்கு வாங்கியிருக்கும் டாடாவிற்கு புதிய விமானங்களும் புதிய வேலை குழுமமும் அமைந்தால்தான் அவர்கள் சிறப்பாக சேவை கொடுக்க முடியும். இந்த லட்சணத்தில் டாடாவிற்கு ஏர் இந்தியாவை விற்றதற்கு இங்கு கூவல் வேறு விடுத்தார்கள்.


Vathsan
மே 31, 2024 16:36

நல்ல வேலை என்ஜின் ஒர்க் ஆகவில்லை என்று கீழே இறங்கி தள்ள சொல்லவில்லை.


A Viswanathan
மே 31, 2024 17:34

டாடா நிறுவனத்திற்கு இது ஒரு கரும்புள்ளி.இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து வேலையிலிருந்து நீக்க வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை