உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26,000 ஏக்கர் வன நிலம் கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு

26,000 ஏக்கர் வன நிலம் கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 9 ஆண்டுகளில் 26,000 ஏக்கர், வனநிலம் ஆக்கிரமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஹாசனில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை, வருவாய்த்துறையினர் ஆக்கிரமித்து இருந்தனர். இதுபற்றி அறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, ஆக்கிரமிப்பு வன நிலத்தை மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, 'மாநிலம் முழுதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வன நிலங்கள் மீட்கப்படும்' என, அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகாவில் 26,000 ஏக்கர் வன நிலம் ஆக்கிரமிப்பட்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அதிகபட்சமாக கலபுரகியில் 6,333 ஏக்கர், சிக்கமகளூரில் 5,864 ஏக்கர், ஷிவமொகாவில் 3,026 ஏக்கர், குடகில் 2,525 ஏக்கர், பெங்களூரில் 2,161 ஏக்கர் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும் எங்களிடம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரோந்து பணிகளில், அதிகம் ஈடுபட முடிவது இல்லை' என்றனர்.ஷிவமொகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களில் காபி, பாக்கு சாகுபடிக்காக, வனநிலம் தொடர்ந்து ஆக்கிரமிப்படுவது தெரிய வந்துள்ளது.வன நில ஆக்கிரமிப்பு குறித்து, சிக்கமகளூரை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'வனநிலம் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன நில ஆக்கிரமிப்பால், காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. 'காட்டு யானைகளால் பறிபோகும் உயிர்களுக்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நாளும் காபி தோட்டத் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்லும்போது, உயிரை கையில் பிடித்துச் செல்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை