உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!

6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இது குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில்; கடந்த 2024ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்துகளில் 54,609 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) இருந்து மே மாதம் வரையில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 பேர் பலியாகியுள்ளனர். அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுவியுள்ளது. டெல்லி-மீரட் விரைவுச்சாலை, டிரான்ஸ்-ஹரியானா, கிழக்கு புற விரைவுச்சாலை, டெல்லி - மும்பை விரைவுச்சாலை போன்ற தேசிய விரைவுச்சாலைகளில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.எஸ்., அமைப்பானது, நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஏற்படும் சம்பவங்களை விரைவாகக் கண்டறிவதற்கும், நெடுஞ்சாலைகளை திறம்படக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

premprakash
ஜூலை 24, 2025 20:31

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 80 சிசி பைக், 800 சிசி கார் மட்டும் விற்று வந்தால் இத்தனை சாவு விழுமா? ரோடு போடுவதற்கும், எரி பொருள் விற்பதற்கும், வெளி நாடு கம்பெனி சம்பாதிப்பதற்கும் அரசு துணை போகிறது...


வேகவதி
ஜூலை 24, 2025 06:30

கதிசக்தி அபாரம். மெடல் குத்திரலாம். ஒழுங்கா நிறைய வாகனங்களுக்கு ஸ்பீட் கண்ட் ரோலர் போட்டு ரெண்டு காசு சம்பாரிச்சிட்டிருந்தோம். அதுலே மண்ணப் போட்டது இந்த ஒன்றிய அரசு. இப்போ எல்லோரும் அனுபவிங்க.


Jayaraman
ஜூலை 24, 2025 03:03

Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.


ரங்ஸ்
ஜூலை 23, 2025 22:19

வேகம் வேகம் வேகம் பரலோகம்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 21:22

டோல்கேட் கொள்ளை மட்டும் குறையாம வருசா வருசம் ஏறிக்கிட்டே இருக்கு.


c.mohanraj raj
ஜூலை 24, 2025 04:21

வாகனங்களை விற்று விட்டு நடந்து செல்லலாம் அதற்கு ஃப்ரீ தான்


முக்கிய வீடியோ