உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலை சீர்குலைக்க சதி! காஷ்மீரில் ஒரே நாளில் 3 என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

தேர்தலை சீர்குலைக்க சதி! காஷ்மீரில் ஒரே நாளில் 3 என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த 3 என்கவுன்டரில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து சதி செயலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=anqzffdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

3 சம்பவம்! 5 பேர் கொலை!

* காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று(செப்.,14) பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.* கதுவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். * கீட்ஷ்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தோடா, கதுவா மற்றும் கீட்ஷ்வார் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து சதி செயல் செய்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில், இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kumar Kumzi
செப் 14, 2024 15:50

காட்டுமிராண்டிகளை கண்டதும் சுட்டுக்கொல்லுங்கள்


Kasimani Baskaran
செப் 14, 2024 14:40

தீவிரவாதம் செய்யும் எவனையும் விடக்கூடாது.


ஆரூர் ரங்
செப் 14, 2024 14:36

மீலாடி நபிக்கும் லீவு விடவேண்டாம். இப்படிக்கு அமைதி வழி.


சிவா அருவங்காடு
செப் 14, 2024 14:05

குறுக்கே வரும் குட்டி பன்றிகளையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொல்வதுதான் ராணுவ வீரர்களுக்கு மரியாதை.


சமீபத்திய செய்தி