ஈரானில் இந்தியர்கள் 3 பேர் மாயம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: ஈரான் நாட்டில் இந்தியர்கள் மூவர் மாயமாகி இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி ஈரான் அரசிடமும், டில்லியில் இருக்கும் ஈரான் துாதரகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை:ஈரான் நாட்டில் இந்தியர்கள் மூவர் காணாமல் போயுள்ளனர். இது பற்றி அந்த நாட்டு அரசிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.டில்லியில் இருக்கும் ஈரான் துாதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருக்கும் இந்திய துாதரகம், ஈரான் அரசுடன் தொடர்பில் உள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிய உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.