உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேஜிஎப் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

கேஜிஎப் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைக்க போய் மூன்று ரசிகர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர்.கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யஷுக்கு இன்று(ஜன.,08) பிறந்தநாள். இதனால் கடக் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன்(வயது21), முரளி(வயது 20), நவீன் காஜி(வயது19) உள்பட 10 பேர் கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி ஆகிய 3 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஜன 09, 2024 04:29

பரவாயில்லை. நாட்டில் மூன்று தத்திகள் குறைந்துள்ளனர்.


தாமரை மலர்கிறது
ஜன 09, 2024 02:02

இந்த பைத்தியக்கார இளைஞர்கள் ஒரு பெண்னை மணந்து அவர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிபோடுவதற்கு முன், அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யாஷுக்கு பாராட்டுக்கள்.


Ramesh Sargam
ஜன 09, 2024 00:15

அவருக்கு பிறந்தநாள். அவர் ரசிகர்களுக்கு இறந்த நாள். என்னவொரு கொடுமை. நடிகர்கள் அவர்கள் பிறந்த நாட்கள், அவர்கள் நடித்த படம் ரிலீஸ் ஆகும் நாட்களின்போது இதுபோன்ற கட் அவுட் வைப்பது, பால் அபிசேஷகம் செய்வது, நாக்கில் குத்திக்கொள்வது, மற்றும் பல கண்ராவிகளை அவர்கள் ரசிகர்கள் தவிர்க்கவேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தை இனி யார் காப்பாற்றுவார்கள்?


Senthoora
ஜன 09, 2024 05:39

தல அஜித்தை பார்த்து, ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கணும், மற்ற நடிகர்கள் அஜித்திடம் வகுப்பு எடுக்கணும்.


g.s,rajan
ஜன 08, 2024 22:56

சபாஷ் ,இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம் .....


M Ramachandran
ஜன 08, 2024 20:12

இந்தியா ஒரு மலை அந்தநாடுடன் மோதி பார்ப்பது மண்டைய்ய் உடையும் என்பது மொதி பார்த்த உடன் தான் வலியினால் உணர முடிந்தது


கனோஜ் ஆங்ரே
ஜன 08, 2024 19:40

யாரு பெத்த புள்ளைங்களோ... இப்படி அநியாயமா, ஒரு நடிகனுக்காக உயிரை விட்டுடுச்சு...? இத் தகவல் தொழில்நுட்ப வளர்ந்த காலத்திலும் இதுபோன்ற “சினிமா பைத்தியங்கள்”... கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா...ன்னு எங்கே போனாலும் உண்டு. சில லட்சங்கள் கொடுப்பார். அந்த சில லட்சங்கள் அந்த உயிர்கள் இழப்புக்கு ஈடாகுமா....?


Palanisamy Sekar
ஜன 08, 2024 19:11

இளைஞர்கள் மத்தியில் நடிகர்களின் போலி நடிப்பில் ஏமாந்துபோய் இப்படி செய்து உயிரை விட்டதுதான் மிச்சம். இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு பெற்றோர்கள்தான் எடுத்து சொல்லவேண்டும். நிழலும் நிஜமும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும். நடிகர்களே தங்களது சுயரூபத்தை காட்டும் வரை காத்திருக்க கூடாது. பாவம் அந்த இளைஞர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை