உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும். மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
அக் 01, 2025 20:25

வேண்டாத வேலை. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பிரைவேட் ஊழியர்களின் தலையில் சுமையாக இறங்கும்.


ஈசன்
அக் 01, 2025 19:25

ஜிஎஸ்டி குறைத்த பின்பு விலைவாசிகள் கணிசமாக குறைந்துள்ளனவே. பின்பு அகவிலைப்படி ஏற்றம் எதன் அடிப்படையில் நிர்ணயிக்க படுகிறது என்பது புரியவில்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2025 22:14

ஜிஎஸ்டி குறைந்தது என்பது செப்டம்பர் மாத கடைசியில்தான். அது கூட சந்தையில் பொருள்களின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நம்மூர் வியாபாரிகள் எதையாவது காரணம் சொல்லி விலையைக் குறைக்க மாட்டவே மாட்டார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2025 18:06

அய்யய்யோ உங்க ஐடியா வேண்டாமுங்கோ சாமியோவ். ஏற்கனவே ரெண்டு தடவை அஞ்சுக மைந்தர் திருக்குவளை முத்துவேலர் மகனார் திருமிகு கருணாநிதியார் விலைவாசி நானிலத்தில் குறைந்துவிட்டது என்று அகவிலைப்படியை குறைத்திருக்கிறார் . மாநில அரசு விலைவாசி திராவிடஸ்தானில் இறங்குமுகமாகவே காட்டப்படும்.


sundarsvpr
அக் 01, 2025 16:49

அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க ஆணை வந்த பிறகு மாநில அரசுகள் அதே விகிதத்தில் வழங்க உத்தரவு இடுகின்றன. முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டின் தலைமை அமைச்சராய் இருக்கும்போதுவிலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்காமல் இரண்டு தடவை ரூபாய் 10 மட்டும் வழங்கினார். இது அநீதி என்று அறிந்தும் ஊழியர்கள் போராடவில்லை. எம் ஜி ராமச்சந்தரன் அரசுதான் இதனை மாற்றி மத்திய அரசு உத்தரவுப்படி விகிதாச்சாரத்தில் அகவிலைப்படி இன்று வரை இரண்டு திராவிட அரசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தங்கள் ஆட்சி பகுதியில் நிலவும் விலைவாசிப்படி ஏன் அகவிலைப்படி நிர்ணயம் செய்யக்கூடாது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை