உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் என்கவுன்டரில் 3 ரவுடிகள் சுட்டுக்கொலை

ஹரியானாவில் என்கவுன்டரில் 3 ரவுடிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சோனிபட்: ஹரியானாவில் மூன்று ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. ஹரியானாவில் இன்று இரவு தனிப்படைப்பிரிவு போலீசார் சோனிபட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த வழக்கு ஒன்றில் தொடர்புடைய மூன்று ரவுடிகளை கைது செய்ய வந்தனர்.இதையடுத்து போலீசார் கைது செய்ய வருவதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். பின் போலீசார் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் நடந்த என்கவுன்டரில் மூன்று ரவுடிகளும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 ரவுடிகள் ஆஷிஷ் காலு, விக்கி ரிதானா, சன்னி குஜ்ஜார் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.இவர்களில் ஒரு ரவுடி கடந்த ஜூன் மாதம் டில்லி பர்கர்கிங் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமன் ஜோன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவன் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ