உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்களை அடிமையாக்க முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

இளைஞர்களை அடிமையாக்க முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

சில்லாங்: இளைஞர்களை அடிமையாக்க முயற்சி நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, மேகாலயாவில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி காங்., எம்.பி ராகுல் மரியாதை செலுத்தினார். பின்னர் ராகுல் பேசியதாவது: மேகாலயா டில்லியில் இருந்து ஆளப்படுகிறது. இதை ஏற்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நாடு எதிர்கொள்கிறது. இளைஞர்களை அடிமையாக்க முயற்சிக்கிறார்கள். யாராலும் உங்களை அடிமையாக்க முடியாது. மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். ஆனால் அதன் பிறகு அவர் அதே அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டு

முன்னதாக ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுபாஷ் சந்திரபோஸ் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, சமூக நீதிக்கு ஒரு எடுத்துக்காட்டு. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், காந்தி, நேரு, ஆசாத், மற்றும் படைப்பிரிவின் ராணி ஜான்சி என்று பல பிரிவுகள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தது. ஜெய் ஹிந்த்!. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு அனுமதி மறுப்பு

முன்னதாக, அசாம் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உடன் கலந்துரையாட ராகுல் திட்டமிட்டு இருந்தார். இன்று நிர்வாகம் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த நிலையில், யாத்திரை பல்கலைக்கழகத்தின் முன் சென்ற போது, மாணவர்கள் ராகுலை சந்திக்க சாலையில் திரண்டனர்.

யாத்திரை தடுத்து நிறுத்தம்

அசாம் மாநிலம் கவுகாத்தி எல்லைக்குள் நுழைய விடாமல் ராகுலை தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணத்துக்காக தடுக்கப்படுவதாக போலீசார் கூறியதால், காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி