உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எனக்கு கூட தான் 5 குழந்தைகள் இருக்கு": பிரதமருக்கு கார்கே பதில்

"எனக்கு கூட தான் 5 குழந்தைகள் இருக்கு": பிரதமருக்கு கார்கே பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என பிரதமர் மோடியின் கருத்துக்கு, 'இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் உள்ளனரா?. எனக்கு கூட தான் 5 குழந்தைகள் உண்டு' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினர். அதிக குழந்தை பெற்றவர்கள் மற்றும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

ஒப்பிட முடியாது

இது குறித்து கார்கே கூறியதாவது: நாங்கள் வலுக்கட்டாயமாக வரி விதித்து, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ-யை தவறாகப் பயன்படுத்தி மக்களை சிறையில் அடைத்தோமா?. சோனியா தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் (பா.ஜ.,) இது போன்று ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?. உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தோம்.நாட்டில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக இதைச் செய்தோம், மேலும் கோடிக்கணக்கானோர் பயனடைந்தனர். நேரு, இந்திரா போன்ற முன்னாள் பிரதமர்களுடன் மோடியை ஒப்பிட முடியாது.

5 குழந்தைகள்

இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் உள்ளனரா?. எனக்கு கூட தான் 5 குழந்தைகள் உண்டு.நாங்கள் பெரும்பான்மை பெறப் போகிறோம். மக்களின் செல்வத்தைத் திருடி, அதிகப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுப்போம் என்கிறார். ஏழைகளுக்கு எப்போதுமே அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

skv srinivasankrishnaveni
மே 04, 2024 15:25

கார்கே ராகுல் போன்றர்கள் ஜெயிக்கவேக்கூடாது


ராம்கி
மே 03, 2024 10:16

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி ஆட்சி அறிவித்து மாதங்கள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து ஜனநாயகத்தை கொன்றதை மறந்துவிட்டார் அரசு அமைப்பு சட்டத்தை திருட்டு வழியில் திருத்திய பெருமை உங்க காங்கிரஸ் கட்சிக்கு உண்டு சாத்தான்கள் நீங்கள் எல்லாம் இப்படி பேச சற்றும் அருகதை அற்றவர்கள் என்று உணரவேண்டும்


Subramaniyam N
மே 03, 2024 14:46

Yes You are absolutely correct in your statement Congress govt has dismissed several governments and changed the constitution several times They abused the Hindu culture and religion deliberately and supported Muslims for vote bank


Suppan
மே 02, 2024 16:43

பல்லாயிரம் ஏழைகளை லட்சாதிபதிகள் ஆக்க முடியும் இரண்டு போதுமே என்று பன்னெடுங்காலமாக அரசு விளம்பரம் செய்து வருகிறது


MADHAVAN
மே 02, 2024 12:13

நீங்கள் கீழிறங்க வேண்டாம்,


jayvee
மே 02, 2024 11:48

பிரதமர் சொன்னதில் உண்மை உள்ளது ஆனால் படித்த இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதில்லை அதே சமயத்தில் அதிக குழந்தை பெற்றுகொளவ்து ஏழை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல பெருமபாலான ஏழைகள் மதம் சாதி கடந்து இப்படி செய்கின்றனர் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இலவச கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் இயந்திரத்தை அணைத்து மாநில அரசும் நிறுவவேண்டும் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்தால் கருத்தடை சாதனம் வழங்கும் வகையில் இதை பொருத்தவேண்டும்


ராம்கி
மே 03, 2024 10:20

இரண்டுக்கு குழந்தைகளுக்கு மேல் பெறாமல் தடுக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய்காந்தி செய்ததுபோல ஆண் பெண் இருபாலருக்கும் கட்டாய கருத்தடைசுன்னத் செய்யும் சட்டம் வரவேண்டும்


NicoleThomson
மே 02, 2024 07:34

இதற்கு தான் படிப்பறிவு என்பது வேண்டும் கார்கே


Pandi Muni
மே 02, 2024 00:29

உனக்கு இருக்கு உன் பிள்ளைகளுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்குன்னு பாத்தின்னா இப்படி பேசமாட்ட


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 01, 2024 20:37

ஏழைகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர் என்ற இவர் கூறுவதை பார்த்தால் ஏழைகள் குழந்தைகளை அதிகம் பெற்று கொள்ளுகிறார்கள் ஏழைகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்வது பொழுது போக்கு என்பது போல ஏழை பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார் எனக்கு குழந்தைகள் என்று இவர் பேசியிருப்பது இவரது மனைவியின் அந்தரங்க விஷயத்தை வீதிக்கு கொண்டு வந்து கேவலப்படுத்தி இருக்கிறார் இது தான் காங்கிரஸ் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை


Kumar
மே 01, 2024 16:54

நோ powers


Kumar
மே 01, 2024 16:53

நோ பவர்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி