உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "காங்கிரசில் நானே இல்லை; அதை விவாதிக்க விரும்பவில்லை"- குலாம் நபி ஆசாத் எஸ்கேப்

"காங்கிரசில் நானே இல்லை; அதை விவாதிக்க விரும்பவில்லை"- குலாம் நபி ஆசாத் எஸ்கேப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிரா காங்., தலைவர் அசோக் சவான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ‛‛நான் காங்கிரசில் இருந்து விலகியதால் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை' என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் பதில் அளித்தார். கடந்த 2008 டிச., முதல் 2010 நவ., வரை மஹாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்தவர் அசோக் சவான். கடந்த 2014 - 19 வரையில் மஹாராஷ்டிரா காங்., தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அசோக் சவான் விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

'எஸ்கேப்'

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு குலாம் நபி ஆசாத் அளித்த பதில்: நான் காங்கிரசில் இருந்து விலகியதால் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. அசோக் சவான் குடும்பம் காங்கிரசிற்கு சேவை செய்தது. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் புத்துயிர் பெற்றிருக்கலாம். ஆனால் இப்போதைய நிலைமை வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை