உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா ஹிந்து நாடல்ல: கர்நாடக முதல்வர் சித்தராமையா

இந்தியா ஹிந்து நாடல்ல: கர்நாடக முதல்வர் சித்தராமையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ''இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், லோக்சபா முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ''இந்தியா ஹிந்து நாடு அல்ல என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு 'ஆம்' என பதிலளித்த சித்தராமையா, ''இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு'' எனக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், ''பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகரை இருக்கையில் அமரவைப்பது வழக்கமான மரபுதான். நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக பார்லிமென்டில் செயல்படுவார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Gopala Krishnan
ஜூன் 29, 2024 13:21

இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள அனைத்து மத்திய அரசுக்கு நிர்பந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஜூன் 28, 2024 04:09

அடுத்த பைத்தியம் கிளம்பி விட்டது. பதிலுக்கு பி ஜே பி சித்தராமையா லீலைகளை வெளியே விட வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 27, 2024 22:40

இவரை குறை சொல்லி பயனில்லை, இவருக்கும் இவர் கூட சேர்ந்த திருட்டு திராவிட ஹிந்து எதிர்பாளர்களுக்கு வோட்டை போட்ட மேதாவி ஹிந்துக்களை தான் திட்ட வேண்டும். தெரிந்தே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் கூட்டம் எது என்றல் அது இவர்கள் தான்.


Satish NMoorthy
ஜூன் 27, 2024 22:23

Pagal CM


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 20:19

அப்போ உங்கள் கூட்டாளிகள் சொல்வது போல..... முஸ்லீம் நாடு.... அப்படி தானே ??


Kumar
ஜூன் 27, 2024 18:00

ஆமா முஸ்லீம் நாடா அறிவிப்போம்


c.chandrashekar
ஜூன் 27, 2024 17:39

கர்நாடகாவில் இவர் இதை எலெக்ஷனுக்கு முன்னர் சொல்லட்டுமே


Mettai* Tamil
ஜூன் 27, 2024 17:30

காலக்கொடுமையா ..... பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிலிருந்து பிரிந்த உடனே பாகிஸ்தான், முஸ்லீம் நாடு என்று அறிவித்தார்கள் . ஆனால் இந்தியா மட்டும் பல முகங்கள் ........ நேதாஜி கையால் சுதந்திரம் வாங்கி இருந்தால் நம் நாட்டின் வரலாறே வேறு .... .


Sankar Ramu
ஜூன் 27, 2024 16:58

ஆமா ஏன்னா இந்துக்குதான் எந்த நாடும் இல்லை. எத்தனை நாடுகள் மற்ற மதங்களுக்கு இருக்கு அவர்கள் பாவம் இல்லையா?


Saai Sundharamurthy AVK
ஜூன் 27, 2024 16:33

எப்போது சான்ஸ் கிடைக்கும் , சந்தடி சாக்கில் புகுந்து விளையாடலாம் என்று காத்துக் கொண்டிருப்பவருக்கு அல்வா கிடைத்தால் விடுவாரா !!!


மேலும் செய்திகள்









புதிய வீடியோ