உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லாமே தப்பு: மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு குட்டு

எல்லாமே தப்பு: மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் உள்ள தகவல்கள் உண்மையாகவே தவறானவை' என மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு மத்திய குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலடி கொடுத்துள்ளார்.'விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், பாலியல் குற்ற வழக்குகளில் 15 நாட்கள் காலக்கெடுவுக்குள், விசாரணையை முடிக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்து, மம்தாவுக்கு மத்திய குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அனுப்பி உள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது: பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் உள்ள தகவல்கள் உண்மையாகவே தவறானது. உங்கள் மாநிலத்தில் விரைவு நீதிமன்றங்கள் செயல்படாமல் இருப்பதை மறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

போக்சோ வழக்குகள்

மாநிலத்தில். 48,600 வழக்குகள் நிலுவையில் இருந்தும் கற்பழிப்பு மற்றும் போக்சோ வழக்குகளை கையாள்வதற்கு கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேற்குவங்க அரசு செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக உங்கள் கடிதத்தில் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்முறை எழுதிய கடிதத்திற்கு மம்தாவுக்கு விரைவு நீதிமன்றங்களை செயல்படுத்துங்கள் என்று மத்திய அரசு பதிலடி கொடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

xyzabc
செப் 01, 2024 21:59

குட்டு வலிக்கவில்லை


vee srikanth
ஆக 31, 2024 15:06

கொள்ளை அடிக்க வந்து வெள்ளை அடிக்க வந்ததாக கடிதம் கொடுத்த " வடிவேலு காமெடி மாதிரி இருக்கு


Corporate Goons
ஆக 31, 2024 11:23

அந்நியர்களுக்கு காவடி தூக்குவதுதான் velai


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 09:12

பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு பெண்கள் எதிரிகளாகத்தான் இருப்பார்கள் ..... இது உலக இயல்பு ..... ஆனால் இதற்கு விதிவிலக்கு ..


sankaranarayanan
ஆக 31, 2024 08:22

திருடன் மற்றவர்களைப்பார்த்து திருடன் திருடன் என்று கத்தினானாம் அதுபோலத்தான் இருக்கிறது


VENKATASUBRAMANIAN
ஆக 31, 2024 08:15

இவரும் வாயால் கெடுத்துக் கொள்கிறார். இவரது மாநிலத்தில் இவர்தான் செய்ய வேண்டும். மாநிலம் சுயாட்சி உரிமை என்றெல்லாம் பேச வேண்டியது பிரச்சினை வந்தால் மத்திய அரசின் மது பழி போடுவது. ஸ்டாலினிடம் கற்றுக்கொண்டார் போலும்


Kasimani Baskaran
ஆக 31, 2024 07:58

இதே போல திராவிடர்கள் சொல்லும் அதி நுணுக்கமான பொய்களை உலகுக்கு தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை