உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டாம்": சொல்கிறார் ஜெய்சங்கர்

"சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டாம்": சொல்கிறார் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: சீனா அண்டை நாடாகும். சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார நாடாகும். இந்தியாவில் இரண்டு பிரச்னைகள் நிலவுகிறது. கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது. இதற்காக, வணிக பாதையில் இந்திய கடற்படை இன்று பத்து கப்பல்களை நிறுத்தி உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய மீனவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து நம் கடற்படையினர் மீட்டனர். இது இந்தியாவின் திறமை. நமது செல்வாக்கு என இன்று உணர்கிறேன். கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் உண்மையில் உதவ வேண்டும். நம் சுற்றுப்புறத்தில் மோசமான விஷயங்கள் நடந்தால் பொறுப்பான நாடாக கருதப்பட மாட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 31, 2024 00:06

சீனா நேராக போரிட்டால் நாம் பயப்படாமல் எதிர்கொள்ளலாம். ஆனால் இந்த குள்ளநரி சீனா, covid போன்ற கொடிய வைரஸ்களை கண்டுபிடித்து, அதை பரப்பி நம்மை கொள்ள நினைக்கின்றன. அதையும் நாம் திறமையாக எதிர்கொண்டோம். வாக்சின் கண்டுபிடித்து உயிர்பலிகளை தடுத்தோம். இப்பொழுது புதுசாக இந்த குள்ளநரி சீனா, செயர்கையாக இயற்கை பேரிடர் உருவாக்கி, இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்வித்து, வெள்ளம் ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க சதிசெய்ய நினைப்பதாக ஒரு செய்தி. அதையும் நாம் திறமையாக எதிர்கொள்வோம். சீனாவை கண்டு நாம் பயப்படவேண்டாம். நாம் மிக மிக பயப்படவேண்டியது நம் நாட்டில் உள்ள தேச துரோகிகளை கண்டுதான்.. அவர்கள்தான் நமக்கு பெரிய எதிரி.


s.sivarajan
ஜன 30, 2024 22:50

ஆமாம் பயப்படுவதைவிட அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கவனிக்கவேண்டும்


Ramkumar
ஜன 30, 2024 19:40

Unmayil india porada vendiyathu thesa patru illatha kulla narigal ( sila arasial katchikal) idam irunrhu thaan.... Ivargalai olitrhu vittaall india ulaga arangil thalai nimirnthu nitkum enbathil maatram illai...


வெகுளி
ஜன 30, 2024 18:54

பொதுவாகவே தோழர் ன்னு எவன் சொன்னாலும் அவன்கிட்ட உஷாரா இருக்கணும்...


Deiva Prakash
ஜன 31, 2024 02:09

பொதுவாவே ஜி ன்னு எவன் சொன்னாலும் அவன்கிட்ட உஷாரா இருக்கணும்.


venugopal s
ஜன 30, 2024 18:50

இவர் கண்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!


அப்புசாமி
ஜன 30, 2024 17:06

இன்னும்.22 முறை பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு 2047 வரை ஓட்டி வல்லரசாயிடலாம்.


C.SRIRAM
ஜன 30, 2024 19:15

குப்பு சாமீ என்ன பண்ணுவதாக உத்தேசம் ?


திகழ்ஓவியன்
ஜன 30, 2024 19:16

உங்க JI வாயில் 10 வருடமா சீன என்று ஒற்றை வார்த்தை வரவில்லை எல்லாம் எதிரி நாடு , இதே பாகிஸ்தான் என்றால் அலப்பறை செய்வார்


Priyan Vadanad
ஜன 30, 2024 16:52

சீனாவை கண்டு நாம் பயப்படக்கூடாது. பம்மிக்கொள்ளலாம்.


சந்திரன்,போத்தனூர்
ஜன 30, 2024 17:19

உன்னைப் போன்ற தேசப்பற்று இல்லாதமதம்மாறி கிரிப்டோக்களை பார்த்துதான் பயப்படணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 30, 2024 17:19

கீழே ரா வின் கருத்து உங்களது பார்வைக்காக .........


Raa
ஜன 30, 2024 16:37

நாம் பயப்படவேண்டியது உள்நாட்டு பிரிவினைவாதிகளை பார்த்து மட்டும்தான். கூட இருந்ததே குழி பரிப்பவர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 20:00

நம்மிடையே துரோகிகளுக்கு குறைவில்லை ..... இங்கே உள்ள சில கருத்துக்களை பார்த்தாலே தெரியும் ........


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை