மேலும் செய்திகள்
பிரியங்காவின் அறியாமை!
13-Dec-2025
புதுடில்லி: '' நாட்டின் வருங்கால பிரதமராக பிரியங்காவை காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரிக்கின்றனர்,'' என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.இது தொடர்பாக ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பிரியங்கா கடினமாக உழைத்து வருகிறார். அவரது பாட்டி இந்திராவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. பிரியங்காவிடம், இந்திராவை மக்கள் பார்க்கின்றனர். அதேநேரத்தில் அவருக்கு என தனித்திறமைகள் உள்ளன.மக்கள் சார்ந்த பிரச்னைகளை பிரியங்கா எழுப்புகிறார். காங்கிரஸ் எம்பிக்களும் பிரியங்காவை எதிர்காலத்தில் பிரதமர் ஆக ஆதரிக்கிறார்கள். அதனை மக்கள் பிரம்மிப்புடன் பார்ப்பார்கள். அதற்காக அவர் கடினமாக உழைக்கிறார். எங்கு எல்லாம் அவர் தேவையோ, அங்கு அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் இம்ரான் மசூத் அளித்த பேட்டி ஒன்றில், பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்திராவின் பேத்தி பிரியங்கா. அவரை நாட்டின் பிரதமர் ஆக்கினால், அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்,எனக்கூறியிருந்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவும் பிரதமர் பதவ குறித்து பேசியுள்ளார்.
13-Dec-2025