உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் வலி புரியாத ராகுல்: பீஹார் துணை முதல்வர் விமர்சனம்

மக்களின் வலி புரியாத ராகுல்: பீஹார் துணை முதல்வர் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: குற்றம் மற்றும் ஊழல் மனநிலை கொண்ட அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களால், பொதுமக்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா விமர்சித்துள்ளார்.பீஹாரில் பா.ஜ., ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் கடந்த 29ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் பா.ஜ.,வை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறுகையில், 'சின்ன அழுத்தம் கொடுத்தால் போதும். நிதீஷ்குமார் 'யு டர்ன்' போட்டு திரும்பி விடுவார்' என விமர்சித்தார்.இந்நிலையில், பாட்னா நகரில் துணை முதல்வர் விஜய் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த இடத்தின் சமூக மற்றும் புவியியல் நிலைகளை பற்றி ராகுலால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர். கீழ்மட்டத்தில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பழகியவர்களுக்கு நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஆனால், குற்றம் மற்றும் ஊழல் மனநிலை கொண்ட அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களால், பொதுமக்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 21:47

டெல்லியில் விவசாயிகள் 100 நாளை தாண்டி போராடினார்கள். அப்போது எந்த ஒரு மந்திரியாவது வந்து விவசாயிகளை பார்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்களா? விவசாயிகள் வலி உங்களுக்கு எப்படித் தெரியும்?உங்களுக்கு தெரிந்தது எல்லாம் அதானியின் வளர்ச்சி தானே...


vbs manian
ஜன 31, 2024 18:13

பாருங்கள் உள்ளூர் யாத்திரை முடிந்ததும் வெளியூர் யாத்திரை கிளம்புவார். பேசாமல் இந்தியாவின் வெளிநாடு ரோந்து வரும் அம்பாசிடர் பதவி கொடுக்கலாம்.


anbu
ஜன 31, 2024 15:11

அவருக்கு வலியும் புரியவில்லை, வழியும் தெரியவில்லை. ஒரு கல்யாணத்தை பண்ணி வையுங்க.


duruvasar
ஜன 31, 2024 12:56

இந்த ஆள் 1 மாதமாக இந்தியாவில் தங்கியிருப்பதே ஒரு கின்னஸ் ரெக்கார்ட்.. அதற்க்கு மேல் இவரைப்பற்றி பேச பெரியதாக எதுவுமில்லை.


குமரி குருவி
ஜன 31, 2024 11:03

பூனை எது ...?..புலி எது...? எனதெரியாத விளையாட்டு பிள்ளை ராகுல் காந்தி


அப்புசாமி
ஜன 31, 2024 10:13

நீங்க எல்லோரும் மக்களைப் போட்டு மிதிப்பது தெரியாதா?


M Ramachandran
ஜன 31, 2024 10:06

காங்கரஸ் கட்சியின் சாபக்கேடு


Ramesh Sargam
ஜன 31, 2024 09:46

வலி புரிந்துவிட்டால் மட்டும் என்ன பெருஸ்ஸா செய்துவிடப் போகிறார் அந்த மக்களுக்கு?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ