உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது" - சொல்கிறார் மம்தா

"அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது" - சொல்கிறார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: பாரத நாட்டின் கலாச்சாரம், மொழி, மதம் மற்றும் சமூகத்தின் பன்முகத் தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கு ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கும் கடின உழைப்பை அரசியலமைப்பு செய்கிறது. நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பதில் நான் பயம் கொள்கிறேன். ஒரு பயங்கரமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதனாக என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமலாக்கத்துறை

மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என யாராவது சொன்னால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தினை மாற்ற வேண்டும் என யாராவது சொன்னால், அது குறிப்பிட்ட சிந்தாந்தத்தை திருப்திபடுத்துவதற்காகவே இருக்கும். எனக்கு பேச உரிமை இல்லை. ஒரு வேளை நான் பேசினால் நாளை என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ramani
பிப் 19, 2024 13:07

முதலில் நீ சட்டத்தை மதிக்க கற்றுக் கொள். அரசியல் சாசனத்தை நீராகாரிக்காமல் இருக்க வேண்டும்


Kumar
பிப் 19, 2024 03:54

இந்த முட்டாள்களின் ஒரே நோக்கம் மோடி பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மத்தியில் பிஜேபி ஆளக்கூடாது. நாட்டை விட இவர்கள் தான் முக்கியம் வாய்ந்தவர்கள். நாடு எக்கேடு கெட்டுப்போனால் நமக்கு என்ன என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. சுயநலவா(ந்)திகள் .....


Ramesh Sargam
பிப் 19, 2024 00:42

ஒரு வேளை நான் பேசினால் நாளை என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்.... வரமாட்டார்கள். ஏன் என்றால் உன் வீட்டிற்கு வருவதற்கு அவர்களுக்கு பயம். நீ ஒரு பேய்.


GMM
பிப் 18, 2024 19:55

மத, மொழி சிறுபான்மையில் அளவீடு / விளக்கம் நிர்ணயிக்க மறந்த சர்வதேச சமூகம் தலையை உள்ளே விட்டு எடுக்க முடியாமல் திணறி வருகிறது? அப்படியே copy அடித்த காங்கிரஸ் இனி ஆள போவது இல்லை? நீதிமன்றம் சென்றால், வாதி, பிரதிவாதங்கள் மதமே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நீண்ட கால வாதம் இருக்கும். காஷ்மீரில் முஸ்லீம் பெரும்பான்மை. கோவா கிருத்தவர்? தமிழகம், மேற்கு வங்க மாநிலத்தில் யார் சிறுபான்மை? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மம்தா, ஸ்டாலின் 500 வார்த்தை மிகாமல் ஒரு விளக்கம் தரமுடியுமா?


sridhar
பிப் 18, 2024 17:49

நாட்டின் பன்முகத்தன்மை பற்றி பேச காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அருகதை கிடையாது. அவர்கள் ஆதரிப்பது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய மதவாதம். இதில் பன்முகத்தன்மை எங்கே இருக்கு.


Svs Yaadum oore
பிப் 18, 2024 17:05

மேற்கு வங்கத்தில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், சிறுபான்மை ஜாதிகளின் பட்டியல் பல மடங்கு அதிகரித்தது எப்படி என்று தெரியவில்லை. ''நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை,'' என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில், 2009 நிலவரப்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம், 66 ஜாதிகள் இடம் பெற்றுஇருந்தன இவற்றில், 12 மட்டுமே சிறுபான்மை ஜாதிகளாக இருந்தன.தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 179 ஜாதிகள் உள்ளன. இவற்றில் சிறுபான்மை மட்டும், 118 ஆக உள்ளன. .நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என தெரியவில்லை என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ....இதற்கு மேற்கு வங்க முதல்வர் பதில் கூறுவார் ....


Svs Yaadum oore
பிப் 18, 2024 16:55

எந்த சட்டமும் ஜனநாயகமும் அரசியல் அமைப்பும் இல்லாத வெறும் வன்முறை மாநிலம் இப்போதைய மேற்கு வங்கம் ....நீண்ட நெடுங்கால கம்யூனிஸ்ட்கள் ஆட்சி கண்ட பலன் ..


Svs Yaadum oore
பிப் 18, 2024 16:52

மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதாம் ...யார் நிராகரிக்க சொன்னது ??...மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் பாலியல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்....இந்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் கோரிக்கை .....மணிப்பூர் மணிப்பூர் என்று இங்கு கூவும் சமூக நீதி மத சார்பின்மை விடியல் திராவிடனுங்க இந்த மேற்கு வங்க அராஜகத்திற்கு மட்டும் வாய் திறக்க மாட்டார்கள் ......


krishna
பிப் 18, 2024 16:04

SUPER.


Visu
பிப் 18, 2024 15:34

சிறந்த நடிப்பு மாதிரி உள்ளது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ