உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 மாதம் ஆகியும் கூட்டணி முடிவெடுக்காத காங்., திரிணமுல் காங்., சொல்லும் காரணம்

7 மாதம் ஆகியும் கூட்டணி முடிவெடுக்காத காங்., திரிணமுல் காங்., சொல்லும் காரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'மேற்குவங்கத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி முடிவெடுக்க கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கேட்டு வருகிறோம்; 7 மாதம் ஆகியும் காங்., எதுவும் செய்யவில்லை' என திரிணமுல் காங்., பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு இடம் கொடுக்காமல் மேற்குவங்கத்தில் தனித்து போட்டி என திரிணமுல் காங்., சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: நீங்கள் ஒருவருடன் கூட்டணியில் இருக்கும்போது, ​​​​முதலில் செய்ய வேண்டியது தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை முடிப்பதுதான். அதுதான் கூட்டணியின் அடிப்படை விதிமுறை. நாங்கள் ஜூன் மாதத்தில் இருந்து தொகுதி பங்கீடு ஏற்பாடு பற்றி காங்கிரசிடம் கேட்டோம். ஏழு மாதங்கள் கடந்துவிட்டன; அவர்கள் எதுவும் செய்யவில்லை. இண்டியா கூட்டணியின் கடைசி கூட்டம் டில்லியில் நடந்தபோது கூட, மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் தொகுதி பங்கீடு பற்றி இறுதி செய்ய டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நிர்ணயித்தார். இப்போது ஜனவரி கடைசி வாரத்தில் இருக்கிறோம்; இதுவரை அவர்கள் எதுவும் செய்யவில்லை. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம். ஆனால் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த இடங்களை கூட்டணிக்கு ஒதுக்குவது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

வீரா
ஜன 31, 2024 01:27

கொடுக்கும் 2 சீட்டுகளை வாங்க கூச்சப்படும் கான் கிராஸ் கட்சியை முடிவெடுக்க தயக்கம் / தாமதம் என்று பில்டப் கொடுப்பது ரொம்ப ஓவர்.


Duruvesan
ஜன 30, 2024 18:55

எழுதி வெச்சிக்கோ இந்த வாட்டி 21 சீட் அங்க BJP ஜெயிக்கும் மொத கூட்டமும் EVM மேல பாலி போடுவானுங்க


duruvasar
ஜன 30, 2024 15:06

கார்கே என்ற பொம்மையை ஆட்டுவிக்கின்ற அதன் உரிமையாளர் சுற்று பயணம் போய்விட்டார் இதிலிருந்தெ அவங்க எந்தவிதமான மண்குதிரை என புரியவில்லையா


Kalyan Singapore
ஜன 30, 2024 15:01

தீயமுகாவையும், காங்கிரஸ் கழற்றிவிட்டாலும் விட்டுவிடும் ( சனாதன ஒழிப்பு , அன்னதானத்தடை , ஹிந்து கோவில்களில் ராமர் வழிபாட்டுத்தடை முதலியவற்றை பி.ஜே.பி வடக்கத்திய மக்களுக்கு கொண்டு சென்று, அது காங்கிரஸ்சுக்கே ஆபத்தாக முடியுமானால் ). பிறகென்ன பப்புவும் குடும்பமும் ( அறிவாளியான பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன் என்று பப்பு கூறியதாக தகவல் - பெண்ணும் அதை எதிர்பார்க்கலாம் அல்லவா ? அதனால் தான் இதுவரை திருமணம் ஆகவில்லை என்றொரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வளம் வருகிறது ) கார்கியும் தான் காங்கிரஸில் இருப்பாங்க .பிரதமர் வேட்பாளர் பற்றி குழப்பமும் இருக்காது .


Venkates.P
ஜன 30, 2024 16:15

அறிவாளியான பெண்ண அல்லது ஆறிவாலய பெண்ணா


Nagarajan D
ஜன 30, 2024 14:44

டிசம்பர் சொன்னீர்கள் சரி வருட டிசம்பர் என்று சொன்னீர்களா? பப்புக்கு எவன் சொன்னானோ நீ நடந்தால் ஜெயித்துவிடுவாய் என்று அவன் ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கு நடந்துவிட்டான் தற்பொழுது கிழக்கிலிருந்து மேற்காக நடக்கிறான். அவன் நடந்து முடித்தவுடன் தொகுதி பங்கீடு செய்ய முடிவு எடுத்திருப்பான் என்ன அவசரம் உங்களுக்கு


குமரி குருவி
ஜன 30, 2024 13:32

காங்கிரஸ் கடைசி நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது..


Palanisamy Sekar
ஜன 30, 2024 12:20

தொகுதி பங்கீட்டிலேயே இந்த லட்சணம் என்றால் இந்த கூட்டணி விளங்குமா என்ன? மம்தா ஆட்களே இல்லாத காங்கிரஸிடம் ரொம்பவும் எதிர்பார்ப்பது சரியல்ல. ஏன் கம்யூனிஸ்டுகளுடன் அதிகம் எதிர்பார்ப்பதில்லை? அடுத்த ஓட்டம் மம்தாதான் இந்த காமெடி கூட்டணியிலிருந்து. காங்கிரசும் திமுக மட்டும்தான் மீதம் இருப்பார்கள் போல..


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ