உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

"சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஊழல் செய்தவர்கள் நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டதால், சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்' என மத்திய அமைச்சரும், ஹமிர்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளருமான அனுராக் தாக்கூர் கூறினார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 4 நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால் முதல்வர் இல்லத்தில் வைத்து தாக்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு அமைச்சர், தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சுவாதி மாலிவால் புகார் கூறியுள்ளார். ஊழல் செய்தவர்கள் நீதிமன்றம் மற்றும் அமாலாக்கத்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டதால், சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும்...! பதிலும்...!

தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதலில் பா.ஜ., நிர்வாகி அகமது ஷேக் காயமடைந்து, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''ஜம்மு காஷ்மீர் மக்கள் இனி பிரிவினைவாதம், பயங்கரவாதம், கல்வீச்சு போன்றவற்றை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை தாக்குதலில் ஈடுபடுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களை யார் செய்தாலும், அவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது'' என அனுராக் தாக்கூர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
மே 19, 2024 22:38

ஆட்சி மாறினால் காட்சி மாறும்


P. VENKATESH RAJA
மே 19, 2024 19:04

எதிர்க்கட்சிணர் கூட்டணியில் உள்ள அனைவரும் ஊழல் செய்கின்றனர் இருந்தால் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கணும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை