உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் குறித்து பீஹார் அமைச்சர் மீண்டும் சர்ச்சை கருத்து

ராமர் கோயில் குறித்து பீஹார் அமைச்சர் மீண்டும் சர்ச்சை கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ராமர் கோயில் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பீஹார் அமைச்சர் சந்திர சேகர், தற்போது கோயிலுடன் கல்வி, மருத்துவமனையை ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வு குறித்து பீஹாரில் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திர சேகர் சமீபத்தில் கூறுகையில், ''ராமர் நம் ஒவ்வொருவருக்குள்ளும், எல்லா இடங்களிலும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது, அவரைத் தேடி எங்கு செல்வீர்கள்? சமூகத்தில் உள்ள ஒரு சில சதிகாரர்களின் பைகளை நிரப்ப பயன்படுகிறது'' என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் பீஹார் அமைச்சர் சந்திர சேகர். அவர் நேற்று (ஜன.,7) செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கு காயம் பட்டால் எங்கே செல்வீர்கள், கோயிலுக்கா, மருத்துவமனைக்கா? உங்களுக்கு கல்வி வேண்டும் என்றாலோ, அதிகாரி, எம்எல்ஏ அல்லது எம்பி., ஆக வேண்டும் என்றாலோ கோயிலுக்கு செல்வீர்களா, பள்ளிக்கூடம் செல்வீர்களா? போலி இந்துத்துவா மற்றும் போலி தேசியவாதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' எனக் கூறினார். இதற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandhra Mouleeswaran MK
ஜன 08, 2024 19:47

ஐயா சந்திரசேகரு காரு ஏனய்யா பள்ளி, மருத்துவமனையோடு நிறுத்திக் கொண்டீர்? இன்னும் கேட்கலாமே ஓட்டு வேண்டுமென்றால் எங்கே செல்வீர்கள்? வாக்காளரின் குடிசைக்கா கோவிலுக்கா? லஞ்சம் தர வேண்டுமென்றால் எங்கே செல்வீர்கள்? அமைச்சரின் அலுவலகத்திற்கா கோவிலுக்கா? குளிக்க வேண்டுமென்றால் எங்கே செல்வீர்கள்? குளியலறைக்கா கோவிலுக்கா? போக எங்கே செல்வீர்கள்? இற்கா கோவிலுக்கா?" உமது இந்த அசிங்கமான ஒப்பீடு முழுவதும் தத்தித் தனமானது என்று தெரியவில்லையா? உமது இதே ஒப்பீட்டை மசூதிக்கும் மாதா கோவிலுக்கும் பௌத்த மடாலயத்திற்கும் ஜைன மடாலயத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம் இல்லையா? எவனைப் பார்த்தாலும் அதென்ன இந்து மதத்தின் மீதே சேற்றை வீசுகிறீர்கள்? உமக்குத் துளி தைரியம் இருந்தால் இந்த தத்தித்தனத்தை உமது கட்சித் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு விட்டு அப்புறம் ஓட்டிக் கேட்டும் பாரும் தத்தி


Bellie Nanja Gowder
ஜன 08, 2024 18:53

நோயுற்றால் மருத்துவ மனைக்கு தான் செல்ல வேண்டும், கல்வி கற்க வேண்டும் என்றால் பள்ளிக்கு தான் செல்ல வேண்டும், என்பது எங்களுக்கும் தெரியம். யாரும் மேற்கண்டவைகளுக்காக கோவிலுக்கு செல்வதில்லை. எதற்கு இந்த தேவை இல்லாத வாதம் அமைச்சரே. கோவிலுக்கு எதற்கு போகிறோம் என்பது அவரவர் தேவைகளை பொறுத்து அவர் அவரே முடிவெடுத்து கொள்வார்கள். உங்களை போன்ற மோடி எதிர்ப்பாளர்கள் சொல்வதனால் கோவிலுக்கு போவதை யாரும் நிறுத்த போவதில்லை. உங்கள் வயிற்றெரிச்சல் பேச்சு பி ஜெ பி க்கு எதிர்வரும் காலங்களில், நல்ல பலமான ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கி தரும். தொடர்ந்து உளறி கொட்டுங்கள், எங்கள் ஊர் ஓசி சோறு நாரமணியை போலவும் 2 g ராசாவை போலவும், உதவா நிதியை போலவும் விடாமல் கதருங்கள்.


Indian
ஜன 08, 2024 16:33

முற்போக்கு சிந்தனையுடன் பேசி இருக்கிறார் வாழ்த்துக்கள், உண்மை கசக்கத்தான் செய்யும்


ராஜா
ஜன 08, 2024 16:14

மக்களை அன்றாடம் காய்சிகளாக, காட்டு மிராண்டிகளாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு கோவில், கடவுள் எதுவும் தேவையில்லை. கடைசி வரை அடிமைப்பட்டு கிடந்த நிலையில் இருந்துகொண்டு, வயிறு நிறைய உண்டுவிட்டு நேரம் வரும்போது போய் சேர வேண்டியது தான். சரி இந்த அமைச்சர் கோவில் தேவையா இல்லையா என்னும் பிரச்சாரத்தை விட்டுவிட்டு இவர் பதவிக்காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு தான் செய்த பணிகளை பொது வெளியில் வெளியிட்டு கல்வி மற்றும் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிக்கலாமே!?


duruvasar
ஜன 08, 2024 15:40

எம்எல்ஏ அல்லது எம்பி., ஆக வேண்டும் என்றாலோ கோயிலுக்கு செல்வீர்களா, பள்ளிக்கூடம் செல்வீர்களா..?.. பள்ளிக்கூடம் என்பது இவர்களுக்கு தேவையே இல்லை . அனால் கட்டாயம் கோவிலுக்கு போவார்கள், எதற்கு உண்டியல் பண்ணதை ஆட்டைய போட.


Saai Sundharamurthy AVK
ஜன 08, 2024 13:46

எதிர்க்கட்சியினர் பாஜகவுக்கு ஓட்டு வங்கியை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே திமுக சனாதன ஒழிப்பு பற்றி பேசுகிறது. கோவில்களில் அராஜகம் செய்கிறது. இந்து பக்தர்களின் மனதை புண்படுத்து கிறது. இந்த மாதிரியான செயல்கள் எல்லாம் இந்துக்களின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு திரும்புகின்றன. ஒருவேளை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரக் கூடாது என்று கங்கணம் கட்டி விட்டார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.


Anantharaman Srinivasan
ஜன 08, 2024 13:13

பீஹாரிலும் ஒரு அரைகுறை பெரியார்.. கடவுள் இல்லை இல்லவேயில்லை. கடவுளை கும்பிடுபவன் முட்டாள் என்று சொல்ல தைரியமில்லை. எல்லா நேரத்திலுமா சாப்பாடு முன் அமர்ந்து சாப்பிடுவோம். பசிக்கிற நேரத்தில் சாப்பிடுவோம். படிக்கிறவயதில் பள்ளிக்கு செல்வோம். நோய் வந்தால் மருத்துவமனை செல்வோம். MLA ஆக ஆசைப்பட்டால் தேர்தலில் நிற்போம். பிஜேபி யை எதிர்க்க. வேண்டும் என்பதற்காக பேசிய பைத்தியகாரன் பேச்சு.


ஆரூர் ரங்
ஜன 08, 2024 12:23

99.9 சதவீத டாக்டர்களே ஒவ்வொரு ஆபரேஷனுக்கு முன்னதாகவும் கடவுளை மனதார வேண்டிக் கொள்கிறார்கள்????. நோயாளிகளுக்கும் அதையே அறிவுறுத்துகின்றனர். பள்ளிகளிலோ தேர்வுகளுக்கு முன் மாணவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துகின்றனர். மனித சக்தி அவ்வளவுதான்.


ஆரூர் ரங்
ஜன 08, 2024 12:18

பிஜெபி க்கு எதிரணியினர் விழுந்துவிழுந்து மறைமுகப் பிரச்சாரம் செய்வது திருப்தியாக உள்ளது????. 1967ல் பச்சைத் தமிழர் காமராஜருக்கு வாக்களிக்க நாத்திகவாதி ஈவேரா பிரச்சாரம் செய்து தோல்வியில் தள்ளியது நினைவுக்கு வருகிறது . ஈவேரா வின் ஆதரவை காமராஜர் வேண்டாமென மறுத்திருந்தால் இங்கே திராவிஷ தலையெடுத்திருக்க மாட்டார்கள்.


S.V.Srinivasan
ஜன 08, 2024 12:13

இவர்களுக்கு வேறு வேலையே இல்லை . மத்திய அரசு எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே தொழில்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ