UPDATED : பிப் 19, 2024 03:33 PM | ADDED : பிப் 19, 2024 03:30 PM
லக்னோ: 'நாட்டில் ஒருபுறம் கோயில்களும், மறுபுறம் நகரங்களில் தொழில்நுட்பமும் வளர்கிறது' என உ.பியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.உத்தரபிரதேச மாநிலத்தில் உலகின் முதல் கல்கி கோயிலான கல்கி தாம் புனித தலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பாக்கியம்
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது; இன்றைய இந்தியா 'வளர்ச்சியுடன் பாரம்பரியம்' என்ற மந்திரத்துடன் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்யா பிரமோத் ஜிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டில் ஒருபுறம் கோயில்களும், மறுபுறம் நகரங்களில் தொழில்நுட்பமும் வளர்கிறது. துறவிகளின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களின் உத்வேகம் காரணமாக புனிதமான இந்த தலத்தில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் இன்று. அந்த வகையில் இந்த நாள் புனிதமான, ஊக்கமளிக்கும் நாள்.பழங்கால சிற்பங்கள்
இந்த தருணத்தில், சத்ரபதி சிவாஜிக்கு எனது மரியாதையை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். இன்று கோயில்கள் கட்டப்பட்டு அதே நேரத்தில் நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன. இன்று நமது பழங்கால சிற்பங்களும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளும் குவிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.