உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது குறித்து அமித்ஷா கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. பார்லிமென்டில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரப் போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. இது காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும். இந்திய பிரிவினைக்கு காரணமான காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு நீதி யாத்திரை செல்ல எந்த உரிமையும் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pqvz7qxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால், மக்கள் பா.ஜ.,வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை கொடுத்து ஆசீர்வதிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்

இது குறித்து தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.,) நடைமுறைப்படுத்தப்படும். விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும்.யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல, குடியுரிமை திருத்தச் சட்டம். ஜனசங்கம் காலம் முதலே பொது சிவில் சட்டம் பா.ஜ.,வின் கொள்கை - அது இந்திய அரசியல் சாசனத்தின் கொள்கையும் ஆகும். மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kannan
பிப் 10, 2024 19:51

சோனியா அம்மையாரின் தவறான கொள்கை காரணமாக bihar நிதிஷ் குமார் கூட்டணி முழுவதும் அள்ளும்.மம்தா பானர்ஜி கூட்டணி பிரிவால் 40 % சீட்களை பிஜேபி வெற்றிபெற வாய்ப்புள்ளது . கெஜ்ரிவாலின் ஊழல் ஆட்சியினால் 40% bjp வெல்லும் .300 கும் குறைவாக வெல்லவேண்டிய மோடிஜி nda கூட்டணி 365 தொகுதிகள் வெல்ல காரணமாக இருப்பது சோனியா அம்மையாரே .


Godfather_Senior
பிப் 10, 2024 17:33

பாஜாக + க்கு நானூறு கிடைக்குதோ இல்லையோ காங்கிரசுக்கு நாற்பதுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளனர்


Google
பிப் 10, 2024 15:09

அனைய போற விளக்கு நன்றாக எரியும்..


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 10, 2024 14:47

"மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது." இதைவிட தெளிவாக எப்படி சொல்ல முடியும்? மதசார்பற்ற பொது சிவில் சட்டம் வேண்டாம் என்றால், இந்தியா ஹிந்து ராஜ்ஜியம் ஆவதை தடுக்க யாராலும் முடியாது.


Balasubramanian
பிப் 10, 2024 14:03

அதைத் தான் காங்கிரஸ் தலைவர் கார்கேயும் பாராளுமன்றத்தில் தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரை டஜன் தேற்றி விட வேண்டும்


S.F. Nadar
பிப் 10, 2024 13:30

400 இல்ல .... இந்நூற்றி நாற்பத்தி மூன்று இம் ஜெய்க்குமாம் ......எதிர்க்கட்சி ....நோ கேள்வி ...


வீரபாண்டி,அலங்காநல்லூர்
பிப் 10, 2024 15:13

பாஜக ஜெயிக்க கூடாதுன்னு கர்த்தரிடம் மன்றாடி கேளு.


Indian
பிப் 10, 2024 13:16

400க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயிப்போம் என்று தவறாக கணிக்கிறார், மக்களுடைய கணிப்பு ஐந்நூற்றி நாற்பத்தி மூன்று தொகுதிகளில் பாஜக ஜெயிக்குமாம்...


தத்வமசி
பிப் 10, 2024 13:40

நாற்பதும் நமதே என்பது போல இல்லை இது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மாதிரி இல்லை இது. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து விட்டு பதுங்குவது போல இல்லை. இன்னும் முதல் கையெழுத்தையே போடாமல் இருப்பது போல இல்லை.


Tamilselvan,kangeyam638701
பிப் 10, 2024 15:10

உன்னோட டொப்பிள் கொடி நாட்டுல தேர்தல் ரிசல்ட்டை பாத்தியா வாலை சுருட்டிட்டு இருக்கணும் சூதானம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை