உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்: மம்தா "சுளீர்"

காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்: மம்தா "சுளீர்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை கொடுக்க நான் தயாராக இருந்தேன். அந்த 2 தொகுதியிலும் அவர்களை வெற்றி பெறச் செய்யவும் தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்பொழுது சொல்கிறேன் அவர்களுக்கு ஒரு சீட்டு கூட நான் கொடுக்க மாட்டேன். மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் வழங்க நாளை வரை மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளேன். நிலுவைத் தொகைகளை தரவில்லை என்றால், பிப்ரவரி 2ம் தேதி முதல் தர்ணா நடத்துவேன். அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
பிப் 01, 2024 08:58

இல்லாத கான்கிரஸ் கட்சியை.... யார் முதுகில் சுமப்பார்கள் ?!?


வெகுளி
பிப் 01, 2024 06:53

தீதீ... பெஹன்ஜி... தர்மம் பண்ணுங்கம்மா...


Ramesh Sargam
பிப் 01, 2024 00:48

தேள் கொட்டும் என்று தெரிந்தும் அதன் மேல் கை வைக்கலாமா...? அதுபோலத்தான், இந்த மமதாவும். இது பெண் தேள். இதன் விஷம் ஆண் தேளை விட மிக மிக கொடூரமானது. ஏன் இது புரியவில்லையோ அந்த காங்கிரஸ் கட்சியினருக்கு..? தேள் கொட்டியும் புத்தி இந்த காங்கிரஸ் கட்சியினருக்கு வரவில்லையென்றால், அந்த ஸ்ரீ ராமரும் அவர்களை காப்பாற்றமுடியாது. ஜெய் ஸ்ரீ ராம்.


ஆரூர் ரங்
ஜன 31, 2024 21:54

இதயத்தில் மட்டும் இடம் எனும் பாலிசி யை இங்கிருந்து கற்றுக் கொண்டுள்ளார்.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 21:51

மம்தா ஸ்டாலின் மாதிரி ஏமாந்த சோணகிரி அல்ல. அவர் ஒரு புத்திசாலி. காங்கிரஸ் க்கு ரொட்டி துண்டு போட, காங்கிரஸ் என்ற பொதிமூட்டையை தோளில் சுமக்க அவர் கழுதை இல்லை.


இராம தாசன்
ஜன 31, 2024 21:47

நேற்று மம்தா சொன்னார் குடியுரிமை சட்டம் அமலாவதை மேற்கு வங்காளத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று - உடனே நம் விடியல் முதவாறும் அதையே சொன்னார்.. இப்போது கான்+கிராஸ் க்கு ஒரு சீட்டும் கிடையாது என்று இன்று மம்தா சொல்லியுள்ளார் - நம் விடியளார் அதை வழி மொழிவாரா?


Easwar Kamal
ஜன 31, 2024 21:20

இப்படி பேசியே பிஜேபி இன்னும் வளரட்டும். வாழ்த்துக்கள்


rajan_subramanian manian
ஜன 31, 2024 20:56

அய்யா வாங்க.அம்மா வாங்க.தமிழ்நாட்டுக்கு வாங்க.ராகுலை பிரதம மந்திரியாக ஆக்க தமிழக கூட்டணி கட்சிகள் தயார்.என்ன இருக்கும் நாற்பது சீட்டில் ஒரு ஐந்து சீட்டை வாங்கிக்கொண்டு அதில் ஜெயித்து நமது நாட்டிற்கு நல்ல வழி காட்ட திராவிட கட்சிகள் தயார்.மறுபடியும் மோடி வந்தால் எங்களால் தாங்க முடியாது. கடந்த பத்து வருஷமாக கோடி கணக்கில் செலவழித்து,மக்களிடம் திட்டு வாங்கி,ஒரு பைசா சம்பாதிக்க விடாமல் கேன்டீனில் வடை,போண்டா சாப்பிட்டதை தவிர வேறு ஒன்றும் பிரயோஜனமில்லை.நாங்கள் ஜெயித்தும் அம்மஞ்சல்லிக்கு உதவாது.எதோ பார்த்து செய்யுங்க.எல்லா சீட்டையும் காமலுக்கே கொடுக்கவும்.இவர் பேச பேச எல்லோரும்நாட்டை விட்டே ஓடிவிடுவர்.


rajan_subramanian manian
ஜன 31, 2024 20:46

AYYA


Duruvesan
ஜன 31, 2024 18:56

இன்னைக்கி அதான் ராவுளுக்கு உங்க ஆளுங்கள விட்டு ஒரு காட்டு, சூப்பர் தீதி, அடுத்து எப்போ தலைல கட்டு, ஆம்புலன்ஸ் ஊருகோலம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி