உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முனாக் கால்வாயில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு

முனாக் கால்வாயில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுடில்லி:வடக்கு டில்லி முனாக் கால்வாயில், நான்கு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.ஹரியானாவிலிருந்து டில்லிக்கு தண்ணீர் செல்லும் முனாக் கால்வாய் கரையில், நேற்று முன் தினம் மதியம் 12:00 மணிக்கு, வாகீல் என்பவர் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வந்தார். அவருடன், அவரது இரண்டு மகன்கள், மைத்துனரின் மகன், சகோதரரின் மகன் மற்றும் இரண்டு குழந்தைகள் வந்திருந்தனர்.வாகீலின் இரண்டு மகன்கள், மைத்துனரின் மகன் மற்றும் அவரது சகோதரனின் மகன் ஆகிய நான்கு பேர் கால்வாய் ஓரத்தில் அமர்ந்திருந்தபோது, அவர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.அவரை மீட்க மற்ற மூவரும் கால்வாயில் குதித்தனர். ஆனால் நான்கு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படை, போலீஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் நேற்று முன் தினமே இரண்டு உடல்களை மீட்டனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின், மற்ற இரண்டு உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.நான்கு சிறுவர்கள் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ