உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பிய புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி

தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பிய புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி

பத்தனம்திட்டா: மலேஷியாவில் தேனிலவை கொண்டாடிவிட்டு, கேரளாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி உட்பட நான்கு பேர் கார் விபத்தில் பலியாகினர்.கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரன்னி பகுதியைச் சேர்ந்தவர் நிகில், 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அனு, 26, என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த நவம்பர் 30ல் அங்குள்ள சர்ச்சில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.இதையடுத்து, புதுமண தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட, தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவுக்கு சமீபத்தில் சென்றனர். அதன்பின், தங்கள் பயணத்தை நிறைவு செய்து, விமானம் வாயிலாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தனர்.இவர்களை, இருவரின் தந்தையரும் வரவேற்று காரில் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பரவூர் - மூவட்டம்புழா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர் திசையில் அய்யப்ப பக்தர்களை ஏற்றி வந்த பஸ் மீது, இவர்கள் சென்ற கார் மோதி விபத்துக்குஉள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன், சேதமடைந்த காரில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.காரின் பாகங்களை உடைத்து, உள்ளே இருந்தவர்களை போராடி மீட்டனர். இதில், அனுவை தவிர, மற்ற மூன்று பேரு சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அனுவை, அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வைகுண்டேஸ்வரன் V
டிச 16, 2024 06:54

Safety Airbags காரில் இல்லையா? இரவோ, அதிகாலையோ 02:00 முதல் 04:00 வரை விழித்திருப்பது மாபெரும் கஷ்டம். Night shift செய்தவர்களுக்குத் தெரியும். அயல் நாட்டு விமானங்கள் திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கு அகால வேளைகளில் தான் வருகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை