உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள்

வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் இருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் . அதில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு எமீரேட்சில் குடிபெயர்வார்கள் என சர்வதேச நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5,100 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கோடீஸ்வரர்கள் இடம்பெயர்வில், சர்வதேச அளவில், பிரிட்டன், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முந்தி உள்ளது. அதேநேரத்தில், கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆனது இந்தியாவை விட சீனா 30 சதவீதம் தான் அதிகம் உள்ளது.இந்நிலையில், சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.அதன்படி, 2024ல் இந்தியாவில் இருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர உள்ளனர். பெரும்பாலானவர்கள் யுஏஇ.,க்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5,100 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு செல்பவர்கள், இந்தியாவில் வீடு ஒன்றையும், தங்கள் தொழில் நலன் மற்றும் வீடு ஒன்றை தக்க வைத்து கொள்கின்றனர். இதன் மூலம் இந்தியாவுடன் பொருளாதார உறவை தொடர்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இடம்பெயர்வுக்கான காரணம் என்ன

கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில், பாதுகாப்பு, நிதி சார்ந்த விஷயங்கள், வரி பலன்கள், ஓய்வுக்கு பிந்தைய திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை சூழல், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு, சுகாதார திட்டங்கள் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை காரணமாக அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

உலகளவில்

2024 ம் ஆண்டு உலகளவில் 1,28,000 கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் விருப்பமான இடமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ravi N Samy
ஜூன் 20, 2024 22:46

RBI rules are not good for a common person. I keep hearing lots of accounts are frozen for small funds received, locally. India can not grow excepting existing top corporates. RBI should learn from China and amend laws. Financial tem is horrible here and why many rich people leave the country.


PARTHASARATHI J S
ஜூன் 20, 2024 08:28

India is becoming holiday destination. When population increases many more will follow.


theruvasagan
ஜூன் 19, 2024 23:38

காசு பணம் உள்ளவர்கள் ஹாயா கிளம்பி விடுவாங்க. நம்மைப் போல உள்ளவங்க சம்பாதிக்கிற சொற்ப வருமானத்தில் நேரடி வரி மறைமுக வரி லொட்டு லொசுக்குன்னு கட்டின மிச்சத்தில் வாய்க்கும் கைக்கும் சரி போகாமல் விண்ணை முட்டும் விலைவாசிகளுடன் போராடி ஜீவனத்தை நடத்துவதுதான் நமக்கு விதிக்கப்பட்ட தலைவிதி.


Barakat Ali
ஜூன் 19, 2024 19:49

திருப்தியாகச் சேர்த்து விட்ட அரசியல்வாதிகளும் வெளியேறுவார்கள் ....


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2024 19:20

பணக்காரர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ, அந்த நாடு தான் பணக்கார நாடாக இருக்கும். அதனால் உடனடியாக பணக்காரர்களின் மீது போடப்படும் அநியாய வரியை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும். பணக்காரர்களுக்கு இரண்டு சதவீதத்திற்கு மேல் வரி போடக்கூடாது. நாட்டிற்கு தேவையான வரியை பெட்ரோல் டீசலின் மீது போட்டால், மக்கள் காரில், பைக்கில் போவது குறைந்து சைக்கிளில் செல்வார்கள். தொந்தி தொப்பை குறையும். சுகர் வியாதி குறையும். காற்று மாசடையாது . சுத்தமான காற்று, தண்ணீர், அனைவருக்கும் கிடைக்க ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது நல்லது. மோடியின் ஆட்சியில் அபிரதமான வளர்ச்சி இருப்பதால், ஏராளமாக பணம் பொதுமக்களிடம் புழங்குகிறது. ஒரு கொத்தனார் சட்டைப்பாக்கெட்டில் ஒரு லட்சம் ரூபாயை பார்க்கலாம். ஒரு கவுன்சிலர் பாக்கெட்டை துழாவினால் ஒரு கோடி ரூபாயை பார்க்கலாம். லட்சம் ரூபாய் ஆயிரமாகிவிட்டது. கோடி ரூபாய் லட்சம் ஆகிவிட்டது. அதனால் அரசின் வரியை அதிகரிப்பது பொருள்களின் நுகர்வை தடுக்கும். சுற்றுப்புற சூழல் கெடாது. இல்லையெனில் மக்கள் கண்டதையும் வாங்கி, தேவையின்றி சுற்றுலா சென்று சுற்றுப்புற சூழலை கெடுத்துவிடுவார்கள்.


GMM
ஜூன் 19, 2024 19:05

தேர்தல் வாக்கு சமம். பணம் தேடுவது எளிதல்ல. அரசியல்வாதிகள் வரி செலுத்தும் மக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அரசு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏழ்மை வைத்து ஏமாற்றி காலம் தள்ள முடியாது. அதிக வரி செலுத்தும் நபர் முதுமையில் அதிகாரம் உள்ள அரசியல் பதவி கொடுக்க வேண்டும். அது போல் பஸ், ரயில்.. போன்ற பொது இடங்களில் வரி செலுத்தும் நபருக்கு முன்னுரிமை. நாட்டில் வரிப்பணம் பொது உபயோகம் மட்டும். தனி நபருக்கு கருவூல. பணம் வரி செலுத்துவோர் ஒப்புதல் இன்றி கொடுக்க கூடாது. இல்லாவிட்டால் செல்வந்தர்கள் ஆண்டு முழுவதும் வெளியேறி கொண்டுதான் இருப்பர். நாட்டில் வறுமை, கடன் தான் மிஞ்சும்.


subramanian
ஜூன் 19, 2024 18:36

திமுகாகாரன் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கிறான்.


என்றும் இந்தியன்
ஜூன் 19, 2024 18:01

வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள்???என்ன வேண்டுமானாலும் உளறலாம் என்றதற்கு இது உத்தரவாதம். சோனியாவிற்கு அயல்நாட்டில் ராகுல் காந்திக்கு அயல்நாட்டில் பிரியங்காவிற்கு அயல்நாட்டில் ஸ்டாலினுக்கு அயல்நாட்டில் கனிமொழிக்கு அயல்நாட்டில் இப்படி பலப்பல அரசியல் வியாதிகளுக்கு அங்கு சொத்து பத்து இருந்தும் அங்கு வெறுமனே சென்று ஒன்று இரண்டு மாதம் இருந்து திரும்பி வருவார்கள். அங்கு சென்று வியாபாரம் ஆரம்பிப்பது இல்லை. இங்கிருந்து ரூ 83.22 எடுத்துக்கொண்டு போனால் தான் அங்கு அது வெறும் 1 டாலர் அதாவது இங்கிருந்து ஒரு கோடி எடுத்து போனால் அது வெறும் 1,19,760 டாலர் தான் அதில் ஒரு வீடு கூட கிடைக்காது. ஆகவே 4300 இந்திய கோடீஸ்வரர்கள் ஓட்டம் வெளிநாடுகளுக்கு என்பது கட்டுக்கதை


Indian
ஜூன் 19, 2024 17:53

கொடூர வரி வசூல் செய்தால் இப்படி தான் போவாங்க


ES
ஜூன் 19, 2024 15:59

This is real achievement of government in ten years. Squeezed from poor


subramanian
ஜூன் 19, 2024 18:35

what .......? squeezing? poor....? here news article about crorepatis, where from poor is coming...?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ