உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!:பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!:பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மசாஜ் சென்டர் உரிமையாளர், உல்லாசமாக இருந்தவர்கள் என, 34 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் கணவர் உதவியுடன் விபசாரம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் தயானந்தா விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம், ஐ.டி., நிறுவனங்களின் நகரம் உட்பட பல்வேறு புனைப்பெயர்களால், கர்நாடக தலைநகராக உள்ள பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு பெங்களூரு நல்ல பெயர் எடுத்து உள்ளதோ, அதை அளவுக்கு கெட்ட பெயரும் எடுத்து உள்ளது.போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு பாலியல் தொல்லை, அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கும் நகரம் பட்டியலிலும், பெங்களூருக்கு இடம் உள்ளது. நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க, போலீசார் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.

வெளிநாட்டு பெண்கள்

இந்நிலையில், சமீபகாலமாக மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில், பெங்களூரில் கொடிகட்டி பறக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள கட்டடத்தில் விபசாரம் நடந்த அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது. இந்நிலையில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.அதுபற்றிய விபரம்: பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு டின் பேக்டரியில், நிர்வனா இன்டர்நேஷனல் மசாஜ் சென்டர் உள்ளது. இந்த மசாஜ் சென்டரில், விபசாரம் நடப்பதாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதனால் அந்த மசாஜ் சென்டரை போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, மசாஜ் சென்டருக்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். ஆறு மாடி கட்டடத்தில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் ஒன்று மற்றும் ஆறாவது மாடியில் உள்ள 40க்கும் மேற்பட்ட அறைகளில், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வெளிநாட்டு, வெளிமாநில இளம்பெண்கள், 44 பேர் மீட்கப்பட்டனர். இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய, மசாஜ் சென்டர் உரிமையாளரான ஐதராபாதை சேர்ந்த அனில், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்த, 33 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள், பெங்களூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸ் அதிகாரி

உல்லாசமாக இருக்க வந்த 33 பேர், மசாஜ் சென்டர் உரிமையாளர் அனிலை, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி, வெளிநாடு, இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை பெங்களூரு அழைத்து வந்ததும், வேலை வாங்கி தராமல் வலுக்கட்டாயப்படுத்தி, விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்துள்ளது. அனிலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கொரோனா காலத்திலும் இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் அரங்கேறியதும், போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தெரிந்து உள்ளது. இவ்வளவு நாட்கள் விபசாரம் நடந்தும், போலீசாருக்கு இதுபற்றி தகவல் கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுந்து உள்ளது.ஆனால், அதே நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் கணவர் உதவியுடன், மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்ததாகவும், இதனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

gayathri
ஜன 13, 2024 11:54

இதை நடத்தியவர்களை விட இதற்கு துணை


Sivak
ஜன 09, 2024 18:59

44 பெண்கள்ல ஒருத்தர் கூட புகார் குடுக்கலையா? அவர்களும் பணத்துக்காக விபச்சார வேலையை செய்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். ஆண்கள் கைது பெண்கள் மீட்பு. என்னே ஒரு சமத்துவம். அதனால தான் சொல்றேன் பெண்கள் எப்படியாவது பொய் சொல்லி பொய் புகார் குடுத்து எப்படியாவது தப்பி விடுவார்கள் ... அவர்கள் சொல்லும் பொய்யை நம்புவதுற்கு நாலு மட சாம்பிராணிகள் இருப்பார்கள்... ஆண்கள் உஷாரா இருந்துக்குங்க..


Indhiyan
ஜன 09, 2024 18:56

கள்ள சாராயத்தை தடுக்கத்தான் நல்ல சாராயத்தை டாஸ்மாக்கில் அரசு ஊத்தி கொடுப்பது போல், இந்தமாதிரியான மசாஜ் சென்டர்களையும் அரசே நடத்தினால் கள்ள உறவுகள், கற்பழிப்புகள் தடுக்கப்படும். அரசுக்கு பணமும் கொட்டும். சாராயத்தை போல், உல்லாசத்தையும் அரசே ஏற்று நடத்தினால் மக்கள் அரசை கொண்டாடுவார்கள். செய்வார்களா?


Hari
ஜன 10, 2024 11:52

மறுபடியும் விடியளா நாட்டில் மனிதர்கள் வாழமுடியாத ஐடியாவை கொடுக்காதீர்கள் ப்ரோ.


Ramesh Sargam
ஜன 09, 2024 00:55

இதுபோன்ற விபச்சார மசாஜ் சென்டர்கள் பெங்களூர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள எல்லா நகரங்களிலும் இருக்கின்றன. ஏதோ ஒரு சென்டரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் போதாது. எல்லாம் பிடிபடவேண்டும். எல்லா உரிமையாளர்களும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் ஒன்று, இதுபோன்ற விபச்சார மசாஜ் சென்டர்கள் போலீஸ் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆகையால், அவர்களுக்கு உதவும் போலீஸ் காரர்களையும் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.


Chandhra Mouleeswaran MK
ஜன 08, 2024 19:56

தொழிலிற்கு அச்சு அசலாகப் பொருத்தமான பெயரை வைத்திருக்கிறான் "நிர்வாண இண்ட்டர் நேஷனல் மஸாஜ் செண்ட்டர்" இவ்வளவு வெளிப்படையான பெயரைப் பார்த்துக் கூடக் காவல்துறைக்குச் சந்தேகம் வரவில்லையா இதுநாள் வரை? ஆச்சரியமாக இருக்கிறது "கவனிக்க வேண்டிய விதத்தில்" "கவனிக்க வேண்டிய ஆட்களையும் அதிகாரிகளையும்" "கவனிக்க வேண்டிய அளவில்" நன்றாகக் கவனித்திருக்கிறான்கள் பெங்களூருக் காவல்துறை "உலக அளவில்" அதிநவீன உளவு அமைப்பை உடையது ஸ்காட்லாந்து யார்டின் அளவிற்கு நவீனமானது" என்று கொஞ்ச காலம் முன்பு உள்துறை அமைச்சர் பீற்றிக் கொண்டத் நினைவிற்கு வருகிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை