உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்கத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி; 13 பேர் மீட்பு

மேற்குவங்கத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி; 13 பேர் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் தெற்கு கோல்கட்டாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு, நெற்றியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விரைந்தார். மேற்குவங்க மாநிலம் தெற்கு கோல்கட்டாவில் 5 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த போது, கட்டடங்கள் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கட்டுமான இடிபாடுகளில் சிக்கிய 13 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு விரைந்தார். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மம்தா பேட்டி

நிருபர்கள் சந்திப்பில் மம்தா கூறியதாவது: இடிபாடுகளில் 6 பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உதவி செய்யும். அருகில் உள்ளவர்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கும் அரசு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAAJ68
மார் 18, 2024 16:44

வள்ளலார் ... தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கையில் என்ன அவசரம்? தேர்தல் சமயத்தில் வேற எதாவது விபத்து நாடகம் நடத்த திட்டம் இருக்கா ........


sankar
மார் 18, 2024 14:22

அதுல பாருங்க - வெள்ளை துணியால ஒரு கட்டு - அது பளிச்சுனு தெரியுறமாதிரி கருப்பு முக்காடு - நல்ல பிளானிங் - ஆனால் பினிஷிங் சரியில்ல


sankar
மார் 18, 2024 14:20

இவ்ளோ பெரிய பேண்டேஜ் எதுக்கு, இவ்ளோண்டு சிராய்ப்புக்கு - நம்ம தல கிட்ட சொல்லியிருந்தா சிறப்பான ஸ்டிக்கர் கொடுத்து இருப்பார்


Mohan
மார் 18, 2024 14:16

இதென்னடா இது புது தினுசா பட்டயா இருக்கு ஒ நெத்தில கட்டு போட்ட மாதிரியும் இருக்கும் ..ஹிந்துக்களிடம் பட்டயா போட்ட மாதிரியும் இருக்கும்


பழனி
மார் 18, 2024 11:29

இந்தியா முழுக்கவே வுடு கட்டி கிரகபிரவேசம் பண்ணுவதோட சரி. அப்புறம் ஒரு சுண்ணாம்பு கூட அடிக்க மாட்டான். கல்கத்தா வுடுங்க கட்டி நூறு நூற்றம்பது வருஷம் ஆயிருக்கும். இடிஞ்சு விழுந்தா நாட்டுக்கு நல்லது. ஜீ கிட்டே சொல்லி புது வுடு வாங்கிக்கோங்க.


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 10:52

தலையில் பட்ட சிறிய காயத்துக்கு பாண்ட் எயிட் போட்டுக் கொண்டாலே போதும்... ஆனால் அம்மணி பெரிய கட்டாகப் போட்டுக்கொண்டுள்ளார்... புள்ளி கூட்டணியில் எஞ்சி இருப்பவர்கள் அனைவரும் நாடகம் நடிப்பதில் படு கில்லாடிகள் ..... சென்னையில் இருந்து மும்பை சென்றுள்ள சர்வாதிகாரியையும் சேர்த்துதான் ......


duruvasar
மார் 18, 2024 10:48

காரைக்கால் அம்மையார் எதற்க்கு கல்கத்தா போனார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை