உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்கா கூரை இடிந்து 6 பேர் பலி

தர்கா கூரை இடிந்து 6 பேர் பலி

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்தில், தர்காவின் கூரை இடிந்து விழுந்து ஆறு பேர் பலியாகினர். தலைநகர் டில்லி நிஜாமுதினில் முகலாய அரசர் ஹுமாயூன் கல்லறை உள்ளது. 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்த கட்டட வளாகத்தில் ஷரீப் பாட்டே ஷா தர்கா உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. 30 ஆண்டு பழமையான இந்த தர்காவில் நேற்று மாலை தொழுகை நடந்தது. அப்போது, தர்கா கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய ௧0க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை