உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு அதிவிரைவு சாலை பாதுகாப்புக்கு ரூ.688 கோடி

மைசூரு அதிவிரைவு சாலை பாதுகாப்புக்கு ரூ.688 கோடி

மைசூரு: பெங்களூரு - மைசூரு அதி விரைவு சாலையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, மத்திய அரசு, 688.11 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.பெங்களூரு - மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள, அதி விரைவு சாலையில், கடந்தாண்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, 2023 ஜனவரி முதல், ஜூலை வரை 121 பேர் இறந்தனர்.இதை தடுக்கும் வகையில், ஆட்டோ, பைக்குகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பொது மக்கள், சாலையை கடப்பதற்கு வேறு வழி அமைக்கப்பட்டது.வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.இந்நிலையில், மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:பெங்களூரு - மைசூரு அதிவிரைவு சாலையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, மத்திய அரசு, 688.11 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. பொது மக்கள் நடப்பதற்கு, நடை மேம்பாலம், சாலை அடையாளங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளன.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ