உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலாத்துறை மையங்களை 76 ஆயிரம் பேர் ரசித்தனர்

சுற்றுலாத்துறை மையங்களை 76 ஆயிரம் பேர் ரசித்தனர்

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் சுற்றுலா துறைக்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளை 76,913 பயணிகள் ரசித்தனர்.இம்மாவட்டத்தில் மூணாறு, வாகமண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. அவற்றில் அக்., 11 முதல் 13 வரை பூஜை விடுமுறையில் பயணிகள் வருகை அதிகரித்தது. மூன்று நாட்களில் 76,913 பயணிகள் ரசித்தனர். மிகவும் கூடுதலாக வாகமண் மலைகுன்றுக்கு 23, 516 பேர், அட்வஞ்சர் பூங்காவுக்கு 22,038 பேர் சென்றனர். அங்கு இந்தியாவில் மிகவும் நீளமான கண்ணாடி நடை பாலம் அக்.8ல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் வாகமண்ணுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். கண்ணாடி நடை பாலத்தை 4280 பயணிகள் ரசித்தனர்.அக்.11 முதல் 13 வரை மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழக சுற்றுலா பகுதிகளை ரசித்த பயணிகள் எண்ணிக்கைமாட்டுபட்டி - 1835, ராமக்கல்மேடு - 6550, அருவிக்குழி - 837, ஸ்ரீ நாராயணபுரம் - 3600, வாகமண் மலைகுன்று - 23,516, அட்வஞ்சர் பூங்கா - 22, 038, பாஞ்சாலி மேடு - 5972, இடுக்கி ஹில் வியூ பூங்கா - 4103, மூணாறு தாவரவியல் பூங்கா - 5327, ஆமைபாறை - 3135.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை