உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படையே தெரியாதாம்: அதிர்ச்சி அளிக்குது ஆய்வு

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படையே தெரியாதாம்: அதிர்ச்சி அளிக்குது ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் 80 சதவீத கணித ஆசிரியர்கள் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர் என ஆய்வில் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1300க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80 சதவீதம் பேருக்கு இயற்கணிதம் உள்ள பாடங்களில் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை. நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்தனர். ஆனால் 7ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடையளித்தனர்.வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கு 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறான புரிதலோடு பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளை செய்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Nagercoil Suresh
ஜூன் 30, 2024 09:27

அந்த போடில் இருப்பது கணிதமா அல்லது படம் வரைகிறாரா என கேட்கும் இப்போதுள்ள குழந்தைகள். ஒரு சில திருக்குறள் வரிகளும் அதே போல தான், இவைகள் இரண்டுமே காலம் கடந்தவைகள் இன்னும் சொல்லப்போனால் அடிப்படை அக்கௌன்ட்ங் படிப்பிலும் இதே நிலை தான், உலகமே உள்ளங்கையில் இருக்கும்பொழுது இதை ஏன் போட்டு தலையை பிய்த்து கொள்வானேன்...காலத்திற்கேற்ப பயிர் செய்வதைப்போல கால நடப்பிற்கு ஏற்ப மாறுவதே சிறந்தது...


J.Isaac
ஜூன் 29, 2024 18:19

இந்த ஆக்கத்தில NEP


ram
ஜூன் 29, 2024 15:54

அந்த லட்சனத்துலே இருக்கு பள்ளி கல்வித்துறை.. ஆட்சி அதிகாரத்திலே இருக்கும் அரசியல்வாதிக்கு கொஞ்சமாவது படிப்பறிவு இருந்தாத்தானே அவனோட துறைரீதியாக நல்ல செயல்பாடுகளை கொண்டு வரமுடியும்.


Kumar Kumzi
ஜூன் 29, 2024 15:36

விடியலிடம் பயிற்சி எடுக்க அனுப்ப வேண்டும்


Arul Narayanan
ஜூன் 29, 2024 15:34

இந்த நிலைக்கு இட ஒதுக்கீட்டை காரணமாக்க வேண்டாம். இட ஒதுக்கீடு இல்லாத பிரபல தனியார் பள்ளி ஒன்றில் சக கணித ஆசிரியர் ஒருவர் சமூக அறிவியல் ஆசிரியரான என்னிடம் ஒரு அடிக்கு எத்தனை அங்குலம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.


A1Suresh
ஜூன் 29, 2024 15:22

நான் படித்த வேலூர் பொறியியல் கல்லூரி வாத்தியார்களுக்கே கணக்கு வராது


subramanian
ஜூன் 29, 2024 14:48

இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் நியமனம். தகுதி இல்லாதவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டால் இப்படித்தான் ஆகும். இடஒதுக்கீடு ஆதரிக்கும் அரசியல் வாதிகள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் உயர்ந்த கல்வி படித்து வெளிநாடுகளில் கோடிகோடியாக சம்பாதிக்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 14:46

நமது முதல்வரே கணித ஆசிரியர்களை நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.


J.Isaac
ஜூன் 29, 2024 18:18

பிரதமரே நடத்தலாமே


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 13:57

அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் கடமையுள்ள ஆசிரியர் பணி ஒரு வேலைவாய்ப்பல்ல. புனிதமான சேவை. அதில் சேர தகுதியைத் தவிர வேறெதுவும் பார்க்கக்கூடாது .


J.Isaac
ஜூன் 29, 2024 18:17

இந்தியா முழுவதும் கல்வி, மருத்துவம் வியாபாரமாகி இப்போது கார்ப்பரேட் கையில்.


தத்வமசி
ஜூன் 29, 2024 13:28

கல்வி கைமீறி சென்று வருகிறது. அதற்கு காரணம் ஆசிரியர்களும், பெற்றோர்களும் தான். பெற்றோர்களுக்கு குழந்தையை கவனிக்க நேரமில்லை. ஆசிரியர்களுக்கு வேலை வேண்டும், ஆனால் வேலை தெரியாது. பல கல்லூரிகளில் தமிழ், இயற்பியல், கணிதம் மற்றும் முக்கியமான துறைகள் மூடப்பட்டு வருகின்றன. இன்று கல்லூரியில் படிப்பதை விடை தொலைதூரக் கல்வியில் படிப்பவர்கள் ஏராளம். பணம் கட்டிவிட்டால் போதும், எண்பது / தொண்ணூறு விழுக்காடு என்று மதிப்பெண்களை அள்ளி வழங்குகின்றனர். இவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தில் எதுவும் தெரியாது. ஆசிரியர் பயிர்ச்சி இரண்டு ஆண்டுகள் நடைபெறுகிறது. ஒரு கல்லூரிக்கு நூறு பேர் தான். கல்லூரிக்கு வருபவர்கள் அதில் எத்தனை பேர் ? அதிர்ச்சியாக இருக்கலாம். பத்து பேர் கூட வருவார்களா என்பது சந்தேகமே. இவர்கள் தானே நாளை ஆசிரியராக வருபவர்கள். வரும் போதே நான் முதுகலை பயின்றுள்ளேன். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன், மேல் வகுப்பு தான் எடுப்பேன் என்று கேள்வி வேறு. ஆனால் பாடம் நடத்தத் தெரியாது. ஏதாவது பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டால், நான் ராஜினாமா செய்கிறேன். இப்போது கீழ் வகுப்பு எடுக்க யாரும் முன் வருவது இல்லை. கணக்கு, இயற்பியல், வேதியல் சுத்தம். ஆசிரியர்களே ஞானசூனியம் தான். மேல் வகுப்பு வேண்டும் என்று சொல்வதன் காரணம், வீட்டு டியுஷன். பள்ளியிலேயே படிப்பிக்க வரவில்லையாம், வீட்டில் சிறப்பு வகுப்பு நடத்துகிறார்களாம். இதில் தரம் எங்கு இருக்கும் ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ