உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., இடைத்தேர்தலில் 86.38 சதவீத ஓட்டுப்பதிவு

பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., இடைத்தேர்தலில் 86.38 சதவீத ஓட்டுப்பதிவு

பெங்களூரு, : பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., பதவிக்கான, இடைத்தேர்தலில் 86.38 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.கர்நாடகா சட்ட மேலவைக்கு, பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து, பா.ஜ., எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் புட்டண்ணா. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். புட்டண்ணாவின் ராஜினாமாவால் காலியான பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு, பிப்ரவரி 16 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.காங்கிரஸ் வேட்பாளராக புட்டண்ணா, பா.ஜ., ஆதரவு வேட்பாளராக ரங்கநாத் உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று தேர்தல் நடந்தது. பெங்களூரு, பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்டங்களில், தேர்தலுக்காக 70 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் 19,172 ஆசிரியர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 6,504 ஆண்கள், 10,040 பெண்கள் என 16,544 பேர், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். 2,628 பேர் ஓட்டு போடவில்லை. 86.38 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, ஓட்டுப்பதிவு மையங்களை சுற்றி 144 தடை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வரும் 20 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை