உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக் மீது மோதுவதை தவிர்த்ததால் விபத்து! மஹா.,வில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி

பைக் மீது மோதுவதை தவிர்த்ததால் விபத்து! மஹா.,வில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் பைக் மீது மோதுவதை தவிர்க்க அரசு பஸ்சை டிரைவர் திருப்பிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு; நாக்பூரில் இருந்து கோண்டியா பகுதிக்கு 35 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காஜ்ர் என்ற கிராமம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக பைக் ஒன்று சாலையில் குறுக்கிட்டதாக தெரிகிறது. பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் நொடிப்பொழுதில் அங்கேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.விபத்து குறித்து உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீசார், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். சடலங்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்த 26 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து பற்றிய விவரம் அறிந்த தேவேந்திர பட்னவிஸ் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; தேவைப்பட்டால் காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வழிகாட்டப்பட்டுள்ளது. உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்குச் சென்றுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற கடவுளை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகேஷ்
நவ 30, 2024 06:45

வேடிக்கை பார்க்க வேலை வெட்டியில்லாமல் 9000 பேர் இருக்காங்க.


கருணாமூர்த்தி
நவ 30, 2024 06:44

நாம எங்கியோ போயிட்டிருக்கோம் கோவாலு. வல்லரசாயிட்டோம் கோவாலு.


Palanisamy Sekar
நவ 29, 2024 20:19

ஜப்பான் நிறுவனங்கள் இங்கே பல டிசைன்களில் இருசக்கர வாகனங்களை ஏகத்துக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்து கொள்ளை லாபம் முடிகின்றது. ஆனால் ஜப்பானில் இருசக்கர வாகனங்களை பார்ப்பது அரிதாகவே இருந்தது. காற்று தூய்மை ஜப்பானில் மிக மிக கட்டுக்குள் உள்ளது. ஆனால் டெல்லி போன்ற இடங்களில் இப்போது மனிதர்கள் வாழவே தகுதியற்ற இடமாகிவிட்டது. ஓட்டுநர் பயிற்சி ஏதுமில்லாமல் சகட்டுமேனிக்கு லைசென்ஸ் கொடுத்துவிடுகின்றார்கள். விபத்துக்களில் முதன்மையானது இருசக்கர வாகன விபத்துதான் முதலிடத்தில் உள்ளது. விபத்தில் இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள். ஆழ்ந்த அனுதாபங்களை தான் தெரிவிக்க முடியும் அரசுக்கு அதற்கு மேல் ஏதும் செய்ய முடியாது. இருசக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை மேலும் கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் உயிர்பலி ஆவதை குறைக்க முடியும். யோசிக்குமா மத்திய மாநில அரசுகள்


தமிழ்வேள்
நவ 29, 2024 19:52

அந்த பைக் பயலுடைய லைசென்ஸை நிரந்தரமாக ரத்து செய்து இனி வாழ்நாள் முழுவதும் எந்த வண்டியையும் இயக்க முடியாதவாறு தடை செய்ய வேண்டும்... அரசு பஸ் விபத்து 9 பேர் மரணம் டிரிப் லாஸ் பஸ் சேதம் அனைத்தும் அவன் தலையில் கட்டப்பட வேண்டும்... சொத்து ஏதாவது இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்..


அப்பாவி
நவ 29, 2024 19:31

கதி சக்தி. கண்டவனுக்கெல்லாம் பைக், கார் வித்து சாதனை. அந்த பைக் காரனை அடிச்சு தூக்கியிருந்தால் ஒரு சாவோட போயிருக்கும். ஒருத்தனுக்கும் சாலை விரிகள் தெரியாதது பரிதாபம்.


Bala
நவ 29, 2024 18:54

விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடந்து அப்பாவி மக்கள் இறக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை