உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.குஜராத்தின் துவராகா மாவட்டத்தில் கல்யாண்பூர் தாலுகா , ரான் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அங்கு திறந்த கிடந்த 30 அடி ஆழ் ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு படையினர் , மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்க முயற்சித்து வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார். மதியம் 1 மணியளவில் குழந்தை தவறி விழுந்துள்ளது. தற்போது 10 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதால் பத்திரமாக மீட்கப்படுவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை