மேலும் செய்திகள்
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 hour(s) ago | 1
ஷிவமொகா: நாய்கள் கண்காட்சியின்போது, ராட் வீலர் இன நாய் ஒன்று, பார்வையாளர் மீது பாய்ந்து கடித்தது.ஷிவமொகா, சாகராவில் நேற்று காலை நாய்கள் கண்காட்சி நடந்தது. நுாற்றுக்கணக்கானோர் இதை காண வந்து இருந்தனர். அப்போது கண்காட்சியில் பங்கேற்ற ராட் வீலர் இன நாய் ஒன்று, உரிமையாளரிடமிருந்து ஓடி வந்து, கண்காட்சியை பார்த்துக் கொண்டிந்த சரத் என்பவர் மீது பாய்ந்து கடித்தது.உடலின் பல இடங்களில் காயமடைந்தார். நாய் கடித்தும், உரிமையாளரோ, நாய் கண்காட்சி ஏற்பாடு செய்தவரோ உதவிக்கு வரவில்லை. கண்காட்சியை காண வந்தவர்களின் உதவியுடன், சரத் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறுகிறார்.'நாய் கண்காட்சி ஏற்பாடு செய்தவர்கள், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1 hour(s) ago | 1