உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடம்புரண்டது சரக்கு ரயில்

தடம்புரண்டது சரக்கு ரயில்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ இரும்பு ஆலையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் துப்காடியா அருகே சென்றபோது, இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்தில் சிக்கின. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக பொகாரோ - கோமோ வழித்தடத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியே செல்ல வேண்டிய 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 15 ரயில்கள், வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில் தடம் புரண்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ