உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயமானது புதிய இந்தியா; வாருங்கள் கொண்டாடுவோம் வாசகர்களே...; பார்லியில் பிரதமர் மோடி உரை!

உதயமானது புதிய இந்தியா; வாருங்கள் கொண்டாடுவோம் வாசகர்களே...; பார்லியில் பிரதமர் மோடி உரை!

ஆப்பரேஷன் சிந்தூர் முடிந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? நிச்சயமாக பலருக்கும் இந்த கேள்வி எழும். நியாயமான கேள்வி. பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ நடவடிக்கை வெற்றியில் முடிந்ததாக ராணுவமே அறிவித்தாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுகொள்ளவில்லை. நிறைய கேள்விகள் கேட்டன. சந்தேகங்களை கிளப்பினார்கள்.சமூக ஊடகங்கள் அபரிமிதமான சுதந்திரத்துடன் செயல்படுகின்ற சூழலில், ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் கைகொடுத்த காரணத்தால், அந்த கேள்விகளும் சந்தேகங்களும் நாட்டின் மூலைமுடுக்கெல்லம் பரவின. அதனால் பெருவாரியான பொதுமக்கள் மனதிலும் அவை எதிரொலித்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rvlgbnrv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போதாக்குறைக்கு, எப்போதுமே இந்தியா பற்றிய செய்தி என்றால் இளக்காரமாக கையாண்டு பழகிப் போன மேற்கத்திய ஊடகங்கள், தங்கள் அரசுகளின் உதவியுடன் சில தகவல்களை பெற்று, அவற்றை ஊதி பெரிதாக்கி சர்வதேச அளவில் பரப்பினார்கள். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பும் நமது மக்கள், நம்மூர் ஊடகங்களை காட்டிலும் மேற்கத்திய ஊடகங்களுக்கு முதல் மரியாதை கொடுப்பதால், ஆப்பரேஷன் சிந்தூர் தோல்வியில் முடிந்ததை போன்ற ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டது. எத்தனை விமானங்களை இழந்தோம்? எத்தனை உயிர்களை பலி கொடுத்தோம்? பாகிஸ்தான் அடி வாங்கியதற்கு ஆதாரமான போட்டோ எங்கே? வீடியோ எங்கே? அவர்கள் அடிவாங்கி கொண்டிருந்தார்கள் என்றால், போரை எதற்காக திடீரென்று நிறுத்தினீர்கள்? அமெரிக்க அதிபர் எப்படி இந்தியாவின் போர் நிறுத்த முடிவை அறிவிக்க முடியும்? அப்படியானால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணிந்ததா இந்தியா? என்று எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளை ஏவுகணைகளாக செலுத்தின. அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மரபு கிடையாது என்பதால், ராணுவம் அமைதி காத்தது. ஆப்பரேஷன் சிந்தூர் சம்பந்தமாக அரசு மறைக்கும் உண்மைகளை தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது; ஆகவே, எங்களின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜனாதிபதியிடம் மனு சமர்ப்பிக்கும் அளவுக்கு தீவிரம் காட்டின நமது எதிர்க்கட்சிகள்.இதற்கு மேலும் அமைதி காத்தால், இந்தியாவின் பெயர் ஒட்டுமொத்தமாக களங்கப்பட்டு போகும் என்று உணர்ந்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் விவாதம் நடத்த சம்மதித்தது. எதிர்க்கட்சிகள் என்னென்ன பேச, கேட்க, விமர்சிக்க விரும்பினவோ அவை அனைத்துக்கும் நேரம் அளித்த பிறகு, விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.சமீபகால வரலாற்றில் ஒரு பிரதமர் இந்த அளவுக்கு விரிவான தகவல்களோடு, இறந்த கால, நிகழ்கால, எதிர்கால இந்தியாவின் பரிணாமங்களை ஒப்பிட்டும் உரசிப் பார்த்தும் உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்திய தாக எவரும் பார்த்ததில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் என்றால் என்ன என்பது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் நிலை என்ன, நமது ராணுவத்தின் தரம் என்ன, மக்களின் விருப்பங்கள் என்ன, எதிர்க்கட்சிகளின் எண்ண ஓட்டம் என்ன என்று அக்குவேறு ஆணிவேறாக அலசினார் மோடி.போர் வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு போதிக்கும் இந்தியா எப்படி போரில் குதிக்க முடியும் என்று பிரதமர் கேட்டார். பாகிஸ்தானுடன் நாம் நடத்தியது போரல்ல, தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 'ஒரு மிலிட்டரி ஆப்பரேஷன்' மட்டுமே என்பதை அவர் விளக்கினார். போரினால் ஏற்படும் அழிவும் பொருளாதார இழப்பும் நாட்டின் வளர்ச்சியை முடக்கி, பல ஆண்டுகளுக்கு பின்தள்ளி இருக்கும் என்பதை அவர் சொல்லாமலே புரியவைத்தார்.எதற்காக சிறப்பு விவாதம் கேட்டோம் என்று எதிர்க்கட்சிகள் நொந்துபோகும் அளவுக்கு, இந்திய வரலாற்றின் சில இருண்ட பக்கங்களை அவர் வெளிச்சத்துக்கு எடுத்து வந்து வாசித்து காட்டினார். என்றாலும் சில தகவல்களை அவர் வெளிப்படையாக வெளியிடவில்லை. வல்லரசு நாடுகளின் சில தலைவர்கள் வாய்க்கு வந்ததை பேசும்போது, அதை கண்டும் காணாதது போல் கடந்து போவதும் ராஜதந்திரம் என்பதை அவர் வேறு வார்த்தைகளால் உணர்த்தினார். சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது என்பதை போல, ஒரு தளவாடம் கூட இழக்காமல் போரில் வெற்றி காண முடியாது என்பதால், எத்தனை டிரோன், எத்தனை விமானம், எத்தனை குண்டுகள் கைவிட்டு நழுவின என்ற கணக்கையெல்லாம் அவர் வாசிக்கவில்லை.'உன்னுடைய சாதனையை உலகம் பாராட்ட மறுத்தால், நீயே பாராட்டிக் கொள்; ஏனென்றால்இடைவிடாத முயற்சி, திட்டமிடல், கடுமையான உழைப்பு, அபாரமான அறிவாற்றல் போன்ற உன்னதமான அம்சங்களின் சங்கமம்தான் வெற்றியும் சாதனையும். நிச்சயம் அவை பாராட்டுக்கு தகுதியானவை' என்று தமிழ்வாணன் சொன்னார். இந்திய ராணுவத்தின் மகத்தான வெற்றி இது. ஒவ்வொரு இந்தியனுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆகவே இது கொண்டாட வேண்டிய சாதனை, சந்தேகங்கள் கேள்விகள் எல்லாம் மோடியின் உச்சக்கட்ட உரையில் பஸ்பமாகி போனதால், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஆப்பரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடுவோம். ஏனென்றால், இது புதிய இந்தியா உதயமானதன் பிரகடனம், ஜெய்ஹிந்த்!

பார்லியில் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சி மிகுந்த உரை

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக் செய்யவும்இரண்டாம் பகுதி படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

Ramona
ஆக 22, 2025 14:33

இந்த நாட்டில் உள்ள சில சில்லற அரசியல் வியாதிகள் இன்னமும் முழு சுதந்திரம் அடையவில்லை, பிற நாட்டிடம் கையூட்டு பெற்று அவர்களுக்கு சேவை செய்ய மட்டுமே ,அவர்கள் எழுதிக்கொடுக்கும் கேள்விகளை தாங்களே கேட்டது போல கபட வேஷம் போட்டு அவர்கள் புகழ்பாடுகிறார்கள். இவர்கள் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டாங்க, அவர்களது கூற்றை புறம் தள்ளுங்கள், வீர நடை பாடுங்கள் ,உண்மையான தேசபற்றுள்ளஇந்திய மக்கள் உங்க பக்கமே.சத்தியமேவ ஜெயத்தி.

ராஜா
ஆக 03, 2025 18:52

ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் பலம் கடந்த 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் சூழலில் இந்த வீரர்கள் ஆரம்ப கல்வியை பெற நாம் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது மன்மோகன் சிங்குக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் । தற்போதைய ஆட்சியாளர்கள் படித்து முடித்து எழுத்தறிவு பெற 1951 ல் இருந்து பெற்ற பல அனுபவங்களை புறக்கணிக்க இயலாது, நன்றி மறப்பது நல்லதல்ல, தமிழர்களின் பண்பாடு,

Kasimani Baskaran
ஆக 02, 2025 21:49

வேலைக்கு ஆள் வைத்தால் அந்த நாட்டு சட்டப்படி குறைந்த பட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களுக்கு கொம்பு முளைத்து இருக்கிறது என்றால் சிக்கல்தான்.

pmsamy
ஆக 02, 2025 17:27

ரஷ்யா உக்ரேன் போர் பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்தது ஒரு சிறிய சர்ச்சை.

ரமேஷ், சென்னை
ஆக 02, 2025 12:35

 Home » Archives » 14-05-2025 பணிந்தது பாகிஸ்தான் நாடே எதிர்பார்த்தபடி கடந்த செவ்வாய் (மே-6) இரவு 1 மணிக்கு நமது முப்படை வீசிய அதிநவீன ஏவுகணைகளும், ட்ரோன்களும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி 9 பயங்கரவாத முகாம்களை நிர்மூலம் செய்தது. இந்த நூதனத் தாக்குதல் மூலம் 100 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் சகாக்கள் கொல்லப்பட்டு, ஹிந்துக்களை மட்டும் பஹல்காமில் படுகொலை செய்த பயங்கரவாதத்துக்கு பழி வாங்கியது மோடி அரசு. இந்தத் தாக்குதலை எந்தவித நஷ்டமும் இல்லாமல், நமது பாதுகாப்புப் படைகள் துல்லியமாகச் செய்து முடித்தது. இதற்குப் பின் 10 ஆண்டுகள் - குறைந்த பட்சம் 6 ஆண்டுகள், கடினமான தயாரிப்புகள் இருந்தது பற்றி இங்கு கூறவேண்டும். இஸ்ரேலாக மாறிய பாரதம் “ஆபரேஷன் சிந்தூர்” (பெட்டிச் செய்தி இஸ்ரேல் மாடல் ‘ஆபரேஷன் சிந்தூர்’) என்று ராணுவம் பெயரிட்ட இந்தத் தாக்குதல், பஹல்காமில் சிந்திய குங்குமத்தைக் குறிக்கும். இந்த அதிரடி பதிலடியை நமது ராணுவம் - விமானப்படை - கப்பற் படை மூன்றும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு 25 நிமிடங்களில் செய்து முடித்தன. இது சாதாரண பழிவாங்கல் அல்ல. ராணுவ தொழில்நுட்ப அறிவியல் உச்சம் இந்த நடவடிக்கை. அதிநவீன தொழில்நுட்ப தானியங்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வைத்து முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர், இஸ்ரேல் பாணியில் பாரதம் பதிலடி தந்து பழிவாங்கும் நாடாக மாறி, உலகத்தின் மதிப்பையும் மரியாதையையும் ஈட்டியிருக்கிறது. 2008-ல் உலக அரங்கில் அனைத்து டெலிவிஷன் சேனல்களும் காட்டிய மும்பை பயங்கரவாதத்தில் 260 பேர் மடிந்து, 600-க்கும் மேலானவர்கள் காயமடைந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராகக் கோபப்படக் கூடாது என்பதற்காக அமைதி நிலவ மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது சோனியா- மன்மோகன் அரசு. இப்படி பயங்கரவாதிகளை வைத்து, பாகிஸ்தான் நம்மை குட்டக்குட்ட குனிந்து வந்த வெட்கமில்லாத காங்கிரஸ் அரசு, “ஐயோ பாவம் பாகிஸ்தானும்தான் பயங்கரவாதத்தால் தாக்கப்படுகிறது என்று கூறி, பயங்கரவாதி அல்ல பாகிஸ்தான், அது பயங்கரவாதியின் இலக்கு” என்று பரிந்து பேசி, உலகமே பயங்கரவாதத்தின் மையம் என்று கருதும் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கியது. இப்படி குனிந்து துவண்ட பாரதம், 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு பதிலடி தரும் ஆண்மையுள்ள நாடாக மாறியது. 2017-ல் டோக்லாமில் நம் ராணுவம், சீனாவின் எல்லை முகாமைத் தாக்கியது, சீனாவை உலுக்கியது. புல்வாமாவில் நமது 46 ராணுவ வீரர்களை ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு தாக்கியதற்குப் பதிலடியாக 2019 பாலக்கோட்டில் அதன் முகாமை நமது விமானப்படை நிர்மூலம் செய்தது. அந்தத் தாக்குதல் நடக்கவே இல்லை என்று புளுகியது பாகிஸ்தான். நடந்ததற்கு ஆதாரம் என்ன என்று பாகிஸ்தானை எதிரொலித்துக் கேட்டார் ராஹுல். ஆனால் கடந்த வாரம் நடந்த தாக்குதலை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டது. எப்படி நடந்தது இந்த மாற்றம்? 2014-ல் பதவிக்கு வந்த மோடி தனது அயராத உலக சுற்றுப்பயணம், கடும் முயற்சியால் ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆழ்ந்த, ராணுவ, வர்த்தக உறவை ஏற்படுத்தி, 10 ஆண்டுகளில் போர் முறையில் நமது நாட்டை இஸ்ரேல் போல மாற்றியதுதான். 2014-ல் பதவிக்கு வந்த பிரதமர் மோடி, வாஜ்பாய் போல முதலில் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டினார். 1999-ல் கார்கில் போர் தொடங்கி, பாகிஸ்தான் ராணுவம் வாஜ்பாய் முதுகில் குத்தியது. அது போல, ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமத் [JEM], லஷ்கர்-இ-தைபா [LeT]அமைப்புகளை ஏவி, காஷ்மீரில் 2018-ல் மட்டும் 500 பேரை படுகொலை செய்து, புல்வாமா தாக்குதலையும் நடத்தி, மோடியையும் முதுகில் குத்தியது பாகிஸ்தான். பிறகு பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்கொள்ளத் தொடங்கினார் மோடி. நமது ராணுவ வீரர்களை பணயம் வைத்த பாலக்கோட் போன்ற, அடிக்கு பதிலடி மாடல் வேலைக்காகாது என்று முடிவு செய்த மோடி, பாகிஸ்தானை ஒடுக்காமல் பயங்கரவாதம் அழியாது என்று புரிந்து கொண்டார். இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, இஸ்ரேலிடமிருந்து தானியங்கி ஹெரான் Mk2 UAV-கள், HAROP ட்ரோன்கள், அமெரிக்காவிடமிருந்து AH-64 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர், AGM-114 ஹெல்ஃபைர் ஏவுகணைகள், ஃபிரான்ஸிடமிருந்து SCALP ஏவுகணைகளை ஏவக்கூடிய ரஃபேல் போர் விமானங்கள், ரஷ்யாவிடமிருந்து எஸ்.யூ-30 போர் விமானங்கள், ஏவுகணைகளை எதிர்த்துத் தகர்க்கும் S-400 தடுப்புக் குடையை வாங்கினார் மோடி. இவை அனைத்தும் அதிதொழில்நுட்பம் வாய்ந்தவை. அந்தத் தொழில் நுட்பத்தை பெறுவது மிகவும் கடினம். அந்தத் தளவாடங்களில் நமது தேவைகளுக்குத் தகுந்தபடி ஸாஃப்ட்வேரை பொருத்தி, நமது ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்றையும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போல ராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைக்காமல், அதி தொழில்நுட்ப அறிவுசார் போர் புரிய தயாரான நிலைக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. ரஃபேல், S-400 வாங்கக் கடும் எதிர்ப்பு 2019-ல் தாக்குதலுக்கு உள்ளான பாலக்கோட் முகாம்கள் போல பல பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருக்கின்றன. அந்தப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவும், நிதி மற்ற உதவிகள் செய்தும், அவர்களின் பின்னாலிருந்து நம்மை தாக்குவது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான். எனவே பாகிஸ்தானை முடக்கினால்தான் பயங்கரவாதம் ஒடுங்கும் என்று முடிவு செய்த மோடி, நமது போர் புரியும் முறையையே மாற்ற முடிவு செய்தார். பாகிஸ்தானை ஊடுருவ, மனிதர்கள் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தானியங்கும் தளவாடங்களை யும், அதற்கான தொழில்நுட்பங்களையும் கடும் முயற்சிகள் செய்து பெற்றார். அதற்கேற்ற ட்ரோன் தொழில்நுட்பங்களை நாட்டுக்குள் ஊக்குவித்து வளர்த்தார் அவர். அதையொட்டி ராணுவத் தளவாடங்கள், அதற்கான வெடிகுண்டு, வெடிமருந்தை நம் நாடே தயாரிக்க சுயச்சார்பு (ஆத்ம நிர்பர்) கொள்கையை செயல்படுத்தினார் அவர். அதனால் 2014-ல் 32% சதவிகிதம் நமது தேவைகளைத் தயாரித்த நம் நாடு, இப்போது 88% தேவைகளைத் தயாரிக்கிறது. இதற்கு மொத்த காரணம் மோடி ஒருவர்தான். மேலும் பலவகையான தொழில்நுட்பங்களை, தளவாடங்களை ரகசியமாக வாங்கியது மோடி அரசு. மோடி வெளிப்படையாக வாங்கிய தளவாடங்கள் இரண்டு. ஒன்று - ரஃபேல் போர் விமானம். அடுத்தது - ரஷ்யாவின் S-400 ஏவுகணைத் தடுப்புக் குடை. ரஃபேல் விமானங்கள் வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், அதில் ஊழல் குற்றம்சாட்டி அதைத் தடுக்க முயற்சி செய்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த ஆபத்தை தடுத்தது. ரஃபேல் இல்லை என்றால், நமது ராணுவம் நம் எல்லைக்குள் இருந்து தானியங்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி 250 கி.மீ. அப்பால் இருக்கும், தீவிரவாத முகாம்களை நிர்மூலம் செய்திருக்க முடியாது. ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை தடுப்புக் குடை பெறுவதை ஆட்சேபித்த அமெரிக்கா, நம் மீது தடைகள் விதிப்போம் என்று மிரட்டியது. தனது நண்பர் ட்ரம்ப் மிரட்டலை லட்சியம் செய்யாமல், 2018-ல் S-400-ஐ வாங்கினார் மோடி. அதுதான் நமது முப்படை, 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கிய பிறகு, பாகிஸ்தான் வெறித்தனமாக வீசிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவை நமது எல்லைக்குள் பாயாமல் தடுத்து அழித்தது. தயாரிப்பின் பரிமாணம் - ஆபரேஷன் சிந்தூர் ராணுவத்துக்கு வேண்டிய முழு தயாரிப்புகளைச் செய்து முடித்த பிறகுதான், பஹல்காம் பயங்கரவாதத்துக்குப் பதிலடி தரும் பொறுப்பையும், அதிகாரத்தையும் நமது முப்படைகளுக்கும் மோடி தந்தார். இஸ்ரேலிடமிருந்து வாங்கி, பெங்களூருவில் நமது ஸாஃப்ட்வேர் கம்பெனிகள் மூலம், மேலும் திறம்படுத்தப்பட்ட தானியங்கி ஹெரான் UAV [Unmanned Aerial Vehicle], ஹாரோப் ட்ரோன்கள், ரஃபேல் விமானத்திலிருந்து வீசிய SCALP ஏவுகணைகள் மூலம்தான், பயங்கரவாதிகளின் முகாம்களைத் தகர்த்தது நமது முப்படை. முகாம்களின் விலாசத்தை ஸாஃப்ட்வேரில் பொறுத்தி விட்டால், அந்த UAV, ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை அந்த இடங்களைத் தேடிச்சென்று தாக்கும். அது மட்டுமல்லாமல், மேல் மொட்டை மாடியிலிருந்து, ஒவ்வொரு மாடியையும் துளைத்து கீழ்தளம் வரை சென்று கட்டடத்தை முழுவதுமாகத் தகர்க்கும். தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் சிலவற்றின் படங்கள் கீழே:         (புல்வாமா தாக்குதல் நடத்திய பஹவால்ப்பூர் ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மேலிருந்து துளைத்த படம் கீழே)  ஆபரேஷன் சிந்தூர் புல்வாமா தாக்குதல் நடந்ததா என்று ராணுவத்தையே ஆதாரம் கேட்ட ராஹுலுக்கு, இந்த முறை அந்த வாய்ப்பைத் தரவில்லை நமது ராணுவம். ஒவ்வொரு முகாமும் தாக்குதலுக்கு முன்பு இருந்த நிலை, தாக்குதலுக்குப் பிறகு நிர்மூலமான நிலை இரண்டையும் விடீயோ போட்டுக் காட்டியது நமது ராணுவம் (1). பாகிஸ்தானே தாக்குதல்கள் நடந்தது என்று ஒப்புக்கொண்டது. [1] https://www.businesstoday.in/india/story/operation-sindoor-satellite-images-show-dome -pierced-lashkar-base-destroyed- in

ரமேஷ், சென்னை
ஆக 02, 2025 12:06

sankaranarayanan
ஆக 02, 2025 11:53

நமது முப்படை வீசிய அதிநவீன ஏவுகணைகளும், ட்ரோன்களும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி 9 பயங்கரவாத முகாம்களை நிர்மூலம் செய்தது. இப்படிப்பட்ட நமது ராணுவ படை வீரர்களை ஒவ்வொரு மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு விழா எடுத்து வாழ்த்த வேண்டும் இதுபோன்று இந்திய வரலாற்றில் எப்போதுமே இல்லாத வெற்றியை அடைந்துள்ளோம் எதிரியை அடக்கியதோடு தலை நிமிர முடியாமல் பூண்டோடு அழித்துவிட்டோம் வல்லாருநாடுகளே இந்தியாவின் செயலை வியப்பாக நோக்குகின்றன. யாருடைய உதவியும் இல்லாமல் கூட்டு சேராமல் தன்னந்தனியாக நமது ராணுவ படை வீரர்கள் உயிரை பணயம் வைத்து நடத்திய வெற்றி வாகை சூடக்கூடிய வீரச்செயல் போற்றுவோம் புகழ்வோம் அவர்களுக்கு மேலும் மேலும் தைரியம் கொடுப்போம் வாழ்க பாரதம்

babu
ஆக 02, 2025 11:11

வருடம் 2013 தேவயானி கோபகடா என்னும் இந்திய வெளியுறவுதுறை அதிகாரி அமெரிக்காவில் தன் வேலைக்காரிக்கு சம்பளம் கொடுக்காமல் அதிகநேரம் வேலைசெய்ய நிற்பந்திக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். பெரும்குற்றவாழிகளைப்போல கையில் விலங்கணிந்து. நிற்வாணமாக பரிசோதனை செய்யப்படுகிறார். இந்த சூழ்நிலையில் அமரிக்கா நினைத்துபார்கமுடியாத அளவுக்கு பதிலடி கொடுத்தது அப்போது இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த, அமைச்சர் அமித்ஷா மன்மோகன் சிங் போல் வேடிக்கை பார்க்காது என சொன்ன அதே Dr. மன்மோகன் சிங்தான் . அரசு சம்மந்தமான எல்லா பேச்சுவார்தைகளையும் உடனே நிறுத்தியது. புதுடில்லியில் உள்ள அமைரிக்க தூதரத்தில் உள்ள எல்லா அதிகாரிகளின் ID கார்டுகளையும் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. தூதரகத்தில் முன்பிருந்த எல்லா பாரிக்கேடுகளும் உடனே அப்புறப்படுத்தப்பட்டன. தூதரக வாகனங்களுக்கு தூதரத்திற்கு வெளியே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. தூரகத்தில் தோட்டக்காரர்கள் உட்பட அனைவரின் ஊதியவிவரங்கள் உடனே தெரியப்படுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டது. தூதரக பள்ளிக்கூடத்தில் அளிக்கப்படும் சலுகைகள் திரும்பபெறப்படும் என அறிவிக்கப்பட்டது. எதிரி நாட்டிற்கு தவிர வேறு எந்த நாட்டிற்கும் இந்தியா இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்ததில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவையனைத்தும் செய்தது இவர்கள் சொல்லும் பேசாத பிரதமர் திரு. மன்மோகன் சிங். ரேடியோ மாதிரி மைக்கிலும் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும்பேசுவதல்ல 56 இஞ்சு வீரம் என்பது. திரு. மன்மோகன் சிங் செய்ததுபோல செயலில் காட்டவேண்டும் உங்கள் 56 இஞ்சு வீரத்தை சமீபத்தில் அமெரிக்கா 104 இந்தியர்களை கைகளிலும் கால்களிலும் விலங்கணிவித்து அனுப்பியதை பார்த்ததோம். குறிப்பாக திரு. மன்மோகன் சிங் வெளிநாட்டற்கு சென்று திரம்பும்போதெல்லாம் செய்தியாளர்களை சந்திப்பார். செய்தியாளர்கள் சந்திப்பு என்றால் என்ன என்பதே உங்களுக்கு தெரியாது வரலாறு முக்கியம் அமைச்சரே......

திகழ்ஓவியன்
ஆக 02, 2025 11:10

கார்பொரேட் நண்பர்களுக்கு மலிவு விலை எண்ணெய் வாங்கி கொடுத்தது ரஸ்சியாவில். அதுக்கு மக்கள் மீது வரி விதித்தது அமெரிக்காவில். இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது ஐக்கிய அரபு அமீரகத்துடன். ஒரே குழப்பமா இருக்கே.

ரமேஷ், சென்னை
ஆக 02, 2025 10:24

 Home » Archives » 14-05-2025 பணிந்தது பாகிஸ்தான் நாடே எதிர்பார்த்தபடி கடந்த செவ்வாய் (மே-6) இரவு 1 மணிக்கு நமது முப்படை வீசிய அதிநவீன ஏவுகணைகளும், ட்ரோன்களும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி 9 பயங்கரவாத முகாம்களை நிர்மூலம் செய்தது. இந்த நூதனத் தாக்குதல் மூலம் 100 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் சகாக்கள் கொல்லப்பட்டு, ஹிந்துக்களை மட்டும் பஹல்காமில் படுகொலை செய்த பயங்கரவாதத்துக்கு பழி வாங்கியது மோடி அரசு. இந்தத் தாக்குதலை எந்தவித நஷ்டமும் இல்லாமல், நமது பாதுகாப்புப் படைகள் துல்லியமாகச் செய்து முடித்தது. இதற்குப் பின் 10 ஆண்டுகள் - குறைந்த பட்சம் 6 ஆண்டுகள், கடினமான தயாரிப்புகள் இருந்தது பற்றி இங்கு கூறவேண்டும். இஸ்ரேலாக மாறிய பாரதம் “ஆபரேஷன் சிந்தூர்” (பெட்டிச் செய்தி இஸ்ரேல் மாடல் ‘ஆபரேஷன் சிந்தூர்’) என்று ராணுவம் பெயரிட்ட இந்தத் தாக்குதல், பஹல்காமில் சிந்திய குங்குமத்தைக் குறிக்கும். இந்த அதிரடி பதிலடியை நமது ராணுவம் - விமானப்படை - கப்பற் படை மூன்றும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு 25 நிமிடங்களில் செய்து முடித்தன. இது சாதாரண பழிவாங்கல் அல்ல. ராணுவ தொழில்நுட்ப அறிவியல் உச்சம் இந்த நடவடிக்கை. அதிநவீன தொழில்நுட்ப தானியங்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வைத்து முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர், இஸ்ரேல் பாணியில் பாரதம் பதிலடி தந்து பழிவாங்கும் நாடாக மாறி, உலகத்தின் மதிப்பையும் மரியாதையையும் ஈட்டியிருக்கிறது. 2008-ல் உலக அரங்கில் அனைத்து டெலிவிஷன் சேனல்களும் காட்டிய மும்பை பயங்கரவாதத்தில் 260 பேர் மடிந்து, 600-க்கும் மேலானவர்கள் காயமடைந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராகக் கோபப்படக் கூடாது என்பதற்காக அமைதி நிலவ மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது சோனியா- மன்மோகன் அரசு. இப்படி பயங்கரவாதிகளை வைத்து, பாகிஸ்தான் நம்மை குட்டக்குட்ட குனிந்து வந்த வெட்கமில்லாத காங்கிரஸ் அரசு, “ஐயோ பாவம் பாகிஸ்தானும்தான் பயங்கரவாதத்தால் தாக்கப்படுகிறது என்று கூறி, பயங்கரவாதி அல்ல பாகிஸ்தான், அது பயங்கரவாதியின் இலக்கு” என்று பரிந்து பேசி, உலகமே பயங்கரவாதத்தின் மையம் என்று கருதும் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கியது. இப்படி குனிந்து துவண்ட பாரதம், 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு பதிலடி தரும் ஆண்மையுள்ள நாடாக மாறியது. 2017-ல் டோக்லாமில் நம் ராணுவம், சீனாவின் எல்லை முகாமைத் தாக்கியது, சீனாவை உலுக்கியது. புல்வாமாவில் நமது 46 ராணுவ வீரர்களை ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு தாக்கியதற்குப் பதிலடியாக 2019 பாலக்கோட்டில் அதன் முகாமை நமது விமானப்படை நிர்மூலம் செய்தது. அந்தத் தாக்குதல் நடக்கவே இல்லை என்று புளுகியது பாகிஸ்தான். நடந்ததற்கு ஆதாரம் என்ன என்று பாகிஸ்தானை எதிரொலித்துக் கேட்டார் ராஹுல். ஆனால் கடந்த வாரம் நடந்த தாக்குதலை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டது. எப்படி நடந்தது இந்த மாற்றம்? 2014-ல் பதவிக்கு வந்த மோடி தனது அயராத உலக சுற்றுப்பயணம், கடும் முயற்சியால் ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆழ்ந்த, ராணுவ, வர்த்தக உறவை ஏற்படுத்தி, 10 ஆண்டுகளில் போர் முறையில் நமது நாட்டை இஸ்ரேல் போல மாற்றியதுதான். 2014-ல் பதவிக்கு வந்த பிரதமர் மோடி, வாஜ்பாய் போல முதலில் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டினார். 1999-ல் கார்கில் போர் தொடங்கி, பாகிஸ்தான் ராணுவம் வாஜ்பாய் முதுகில் குத்தியது. அது போல, ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமத் [JEM], லஷ்கர்-இ-தைபா [LeT]அமைப்புகளை ஏவி, காஷ்மீரில் 2018-ல் மட்டும் 500 பேரை படுகொலை செய்து, புல்வாமா தாக்குதலையும் நடத்தி, மோடியையும் முதுகில் குத்தியது பாகிஸ்தான். பிறகு பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்கொள்ளத் தொடங்கினார் மோடி. நமது ராணுவ வீரர்களை பணயம் வைத்த பாலக்கோட் போன்ற, அடிக்கு பதிலடி மாடல் வேலைக்காகாது என்று முடிவு செய்த மோடி, பாகிஸ்தானை ஒடுக்காமல் பயங்கரவாதம் அழியாது என்று புரிந்து கொண்டார். இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, இஸ்ரேலிடமிருந்து தானியங்கி ஹெரான் Mk2 UAV-கள், HAROP ட்ரோன்கள், அமெரிக்காவிடமிருந்து AH-64 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர், AGM-114 ஹெல்ஃபைர் ஏவுகணைகள், ஃபிரான்ஸிடமிருந்து SCALP ஏவுகணைகளை ஏவக்கூடிய ரஃபேல் போர் விமானங்கள், ரஷ்யாவிடமிருந்து எஸ்.யூ-30 போர் விமானங்கள், ஏவுகணைகளை எதிர்த்துத் தகர்க்கும் S-400 தடுப்புக் குடையை வாங்கினார் மோடி. இவை அனைத்தும் அதிதொழில்நுட்பம் வாய்ந்தவை. அந்தத் தொழில் நுட்பத்தை பெறுவது மிகவும் கடினம். அந்தத் தளவாடங்களில் நமது தேவைகளுக்குத் தகுந்தபடி ஸாஃப்ட்வேரை பொருத்தி, நமது ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்றையும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போல ராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைக்காமல், அதி தொழில்நுட்ப அறிவுசார் போர் புரிய தயாரான நிலைக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. ரஃபேல், S-400 வாங்கக் கடும் எதிர்ப்பு 2019-ல் தாக்குதலுக்கு உள்ளான பாலக்கோட் முகாம்கள் போல பல பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருக்கின்றன. அந்தப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவும், நிதி மற்ற உதவிகள் செய்தும், அவர்களின் பின்னாலிருந்து நம்மை தாக்குவது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான். எனவே பாகிஸ்தானை முடக்கினால்தான் பயங்கரவாதம் ஒடுங்கும் என்று முடிவு செய்த மோடி, நமது போர் புரியும் முறையையே மாற்ற முடிவு செய்தார். பாகிஸ்தானை ஊடுருவ, மனிதர்கள் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தானியங்கும் தளவாடங்களை யும், அதற்கான தொழில்நுட்பங்களையும் கடும் முயற்சிகள் செய்து பெற்றார். அதற்கேற்ற ட்ரோன் தொழில்நுட்பங்களை நாட்டுக்குள் ஊக்குவித்து வளர்த்தார் அவர். அதையொட்டி ராணுவத் தளவாடங்கள், அதற்கான வெடிகுண்டு, வெடிமருந்தை நம் நாடே தயாரிக்க சுயச்சார்பு (ஆத்ம நிர்பர்) கொள்கையை செயல்படுத்தினார் அவர். அதனால் 2014-ல் 32% சதவிகிதம் நமது தேவைகளைத் தயாரித்த நம் நாடு, இப்போது 88% தேவைகளைத் தயாரிக்கிறது. இதற்கு மொத்த காரணம் மோடி ஒருவர்தான். மேலும் பலவகையான தொழில்நுட்பங்களை, தளவாடங்களை ரகசியமாக வாங்கியது மோடி அரசு. மோடி வெளிப்படையாக வாங்கிய தளவாடங்கள் இரண்டு. ஒன்று - ரஃபேல் போர் விமானம். அடுத்தது - ரஷ்யாவின் S-400 ஏவுகணைத் தடுப்புக் குடை. ரஃபேல் விமானங்கள் வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், அதில் ஊழல் குற்றம்சாட்டி அதைத் தடுக்க முயற்சி செய்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த ஆபத்தை தடுத்தது. ரஃபேல் இல்லை என்றால், நமது ராணுவம் நம் எல்லைக்குள் இருந்து தானியங்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி 250 கி.மீ. அப்பால் இருக்கும், தீவிரவாத முகாம்களை நிர்மூலம் செய்திருக்க முடியாது. ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை தடுப்புக் குடை பெறுவதை ஆட்சேபித்த அமெரிக்கா, நம் மீது தடைகள் விதிப்போம் என்று மிரட்டியது. தனது நண்பர் ட்ரம்ப் மிரட்டலை லட்சியம் செய்யாமல், 2018-ல் S-400-ஐ வாங்கினார் மோடி. அதுதான் நமது முப்படை, 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கிய பிறகு, பாகிஸ்தான் வெறித்தனமாக வீசிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவை நமது எல்லைக்குள் பாயாமல் தடுத்து அழித்தது. தயாரிப்பின் பரிமாணம் - ஆபரேஷன் சிந்தூர் ராணுவத்துக்கு வேண்டிய முழு தயாரிப்புகளைச் செய்து முடித்த பிறகுதான், பஹல்காம் பயங்கரவாதத்துக்குப் பதிலடி தரும் பொறுப்பையும், அதிகாரத்தையும் நமது முப்படைகளுக்கும் மோடி தந்தார். இஸ்ரேலிடமிருந்து வாங்கி, பெங்களூருவில் நமது ஸாஃப்ட்வேர் கம்பெனிகள் மூலம், மேலும் திறம்படுத்தப்பட்ட தானியங்கி ஹெரான் UAV [Unmanned Aerial Vehicle], ஹாரோப் ட்ரோன்கள், ரஃபேல் விமானத்திலிருந்து வீசிய SCALP ஏவுகணைகள் மூலம்தான், பயங்கரவாதிகளின் முகாம்களைத் தகர்த்தது நமது முப்படை. முகாம்களின் விலாசத்தை ஸாஃப்ட்வேரில் பொறுத்தி விட்டால், அந்த UAV, ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை அந்த இடங்களைத் தேடிச்சென்று தாக்கும். அது மட்டுமல்லாமல், மேல் மொட்டை மாடியிலிருந்து, ஒவ்வொரு மாடியையும் துளைத்து கீழ்தளம் வரை சென்று கட்டடத்தை முழுவதுமாகத் தகர்க்கும்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை