உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு தமிழர் பதவியேற்பு

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு தமிழர் பதவியேற்பு

புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அஜய் திக்பால் மற்றும் ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர் என்ற தமிழரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பாக்ரூ பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.நீதிபதியாக பதவியேற்ற அஜய் திக்பால் சுமார் 31 வருடங்களாக வக்கீலாக பலவிதமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 51 வயதை எட்டும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் சங்கரின் பூர்வீகம் தமிழகத்தின் பொள்ளாச்சி. ஏற்கெனவே பொள்ளாச்சியைச் சேர்ந்த நீதிபதி கே.வி. விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் படிப்பை டில்லியில் முடித்த ஹரீஷ், இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்தார். உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகளுக்காக ஆஜராகி வாதிட்டுள்ளார். நாட்டின் பிரபல வக்கீல்களான சோலி சொரப்ஜி, கே.கே. வேணுகோபால், சி.எஸ். வைத்தியநாதன் உட்பட பல சீனியர்களிடம் பணிபுரிந்துள்ளார்.நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பாக மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அயோத்தியா வழக்கு, கோத்ரா கலவரம், ராணுவம் மற்றும் கடற்படை தொடர்பான வழக்குகள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு என என்னற்ற வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இவர் பிரபல உச்சநீதிமன்ற சீனியர் வக்கீல் சி.எஸ். வைத்தியநாதனின் மகன். நீதிபதி ஹரீஷுக்கு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி எழுத படிக்க நன்றாக தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Govind
ஜன 08, 2025 22:06

ஹலோ சம்பத்... உழைப்பால் உயர்ந்த ஒருவரை பற்றி வயிறு எரியாமல் வாழ்த்தவும் .... இல்லையேல் வாயை மூடவும்... . நல்லோரையும் கற்றோரையும் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்த்துவோம்


தாமரை மலர்கிறது
ஜன 08, 2025 19:54

வாழ்த்துக்கள்.


sankaranarayanan
ஜன 08, 2025 17:47

51 வயதை எட்டும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் சங்கரின் பூர்வீகம் தமிழகத்தின் பொள்ளாச்சி. நடுத்தர வயதில் உயர் நீதிபதி ஆகியிருக்கும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இவர் நிச்சயமாக உச்ச மன்றத்தின் தலைமை நீதிபதியாக வருவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன


Sampath Kumar
ஜன 08, 2025 15:51

ஹரிஷ் வைத்த்யநாதன் சங்கர் ???? பேரிலே பிரமாணம் மணக்குது பின்ன இவரு எப்படி தமிழரென்று தினமலர் சொல்லுது இவரு பிராமணர் என்பதால் தான் நீதிபதவி கிடைத்து உள்ளது நினைப்பதை மறைத்து தமிழன் என்று முத்திரை குத்துவது


Barakat Ali
ஜன 08, 2025 14:52

எங்க ஈரவெங்காயம் மட்டும் இல்லன்னா இவர் உயர்ந்திருக்க முடியுமா ????


Jagan (Proud Sangi)
ஜன 08, 2025 20:05

நீங்க சொல்வது கூட ஒரு வகையில் சரிதான். இங்கே விரட்டினதால் தான் அங்கே உயர முடிந்தது என்று கூட சொல்லலாம்.


Sudha
ஜன 08, 2025 14:08

அப்பா, சிபாரிசு, சரி சரி


GoK
ஜன 08, 2025 12:33

இவரு பச்ச தமிலன் இல்ல போல இருக்கே


Matt P
ஜன 08, 2025 12:28

தமிழராயிருந்தாலும் இந்தி தெரிந்ததனால் தான் அவர் டெல்லியில் நீதிபதியாக முடிந்தது. அவர் மலையாளமும் தெரியும் என்பதால் அவரை யாரும் மலையாளியாக நினைக்காமல் இருந்தால் சரி. திருவநந்தபுரத்தில் பிறந்தால் அவர் மலையாளியாக தான் இருக்க முடியும் என்று சில அறிவு ஜீவிகள். இந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும் இங்கிலீஷு தெரிந்தால் தான் அமெரிக்காவிலும் CEO ஆக முடியும். நமது நாட்டிலேயே எத்தனையோ மொழிகள் இருக்கும்போது ஜெர்மன் பிரான்ஸ் ரஷியன் கற்பதை விட்டு நமது மொழிகளுக்கு முதலில் மதிப்பு கொடுப்போம். நமது நாட்டிலேயே உயர்வோம். இங்கிலீஷும் நமது மொழி தான்


Ramesh Sargam
ஜன 08, 2025 12:17

வாழ்த்துக்கள். நீங்கள் அரசியல் அழுத்தத்துக்கு அஞ்சாமலும், பணம், சொத்து இவைகளுக்கு ஆசைப்படாமலும், நேர்மையாக, நியாயமாக, மனசாட்சிக்கு உட்பட்டு நீதி வழங்கவேண்டும். வாழ்த்துக்கள்.


Rajasekar Jayaraman
ஜன 08, 2025 12:15

திருட்டு திராவிடம் போட்ட ....


சமீபத்திய செய்தி