மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
சுப்பிரமணியபுரா: ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி, கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு சுப்பிரமணியபுராவில் வசிப்பவர் தேஜஸ், 19. இவருக்கும், 19 வயது கல்லுாரி மாணவிக்கும், சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசியதுடன், அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்நிலையில் கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக அமர்ந்து பேசியதை, தேஜஸ் மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார்.அந்த புகைப்படத்தை மாணவியிடம் காட்டி, இந்த புகைப்படத்தை உங்கள் வீட்டில் காட்டி விடுவேன். அப்படி செய்யாமல் இருக்க, நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் என்று, மிரட்டி உள்ளார். பயந்து போன மாணவி, தேஜஸ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து உள்ளார்.பின், வீட்டில் இருந்து நகையையும் திருடி கொடுத்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து நகை காணாமல் போனது குறித்து, மாணவியிடம், அவரது தாய் விசாரித்த போது, தேஜஸ் மிரட்டுவதை கூறி அழுதார்.தேஜஸ் மீது சுப்பிரமணியபுரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், மாணவியை மிரட்டி பறித்த 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.
7 hour(s) ago | 2
12 hour(s) ago