உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி காலை வாரிய டில்லி

ஆம் ஆத்மி காலை வாரிய டில்லி

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியை, டில்லி மீண்டும் காலை வாரியது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.,வே முன்னிலை பெற்றுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு முதல் டில்லியை ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதன் பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், டில்லியில் இருந்து லோக்சபாவுக்கு பிரதிநிதிகளை அனுப்புவது என்ற அக்கட்சியின் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bc6i1j47&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் அலை காரணமாக 7 தொகுதிகளிலும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. 2024 தேர்தலிலும் பா.ஜ.,விற்கு சாதகமாகவே மக்கள் ஓட்டளித்தனர்.இந்த முறை எம்.பி.,யை அனுப்புவது என ஆம் ஆத்மி தீவிரம் காட்டியது. தேர்தலுக்கு முன்பாக, மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை அனுதாப அலையாக மாற்ற அக்கட்சியினர் முயற்சி செய்தனர். இடைக்கால ஜாமினில் வந்த கெஜ்ரிவாலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக செல்லும் இடங்களில் எல்லாம் பேசினார். இது வெற்றியை கொடுக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் அனைத்தும் தலைகீழாக மாறியது. இந்த முறையும் டில்லி மக்கள் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 7 தொகுதிகளிலும் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகி போய்விட்டதே என அவர்கள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

doss
ஜூன் 05, 2024 20:01

இந்திய மக்கள் இன்னும் மதம் சாதி இனம் மொழியை விட்டு நாம் இந்தியர் என்ற உணர்வுக்கு வரவில்லை.வந்திருந்தால் பாஜக இம்முறை ஆட்சி அமைத்திருக்க இயலாது.கர்நாடகாவில் காங்கிரஸ் உள் கட்சி பிரச்சனை தெலுங்கானாவில்?ஆந்திராவில்?ஏன் பீகாரிலும் காங்கிரஸ் கூட்டணி தேறவில்லை?டெல்லியிலும் கடைசி நேர விலகல் காங்கிரஸ் பலவீனப்பட்டது?ஆம்ஆத்மிக்கு ஏன் சறுக்கல்?மதம் தான் காரணம்?


Vijayakumar Srinivasan
ஜூன் 06, 2024 05:40

ஜாதி. மதம். இன்றி அரசியல் இல்லை. இவை இரண்டும் நகமும் சதையும் போல. எல்லா கட்சிகளும் இதை சார்ந்தே உள்ளது. எதுவும் விதிவிலக்கல்ல


Loganathan
ஜூன் 05, 2024 19:20

சாராய ஊழல் வாதி


Sivaraman
ஜூன் 04, 2024 14:23

மோடி என்கிற ஒரு நபருக்கு எதிராக ஜாதி மதம் எல்லாத்தையும் பயன்படுத்தியும் அவர் தான் பதவிக்கு வருகிறார். ஒரு இடத்தில அடிச்சிக்கிட்டு இன்னொரு இடத்தில கட்டிக்கிட்டு என்ன செய்தாலும் தடுக்கமுடியவில்லை. . ஒரு சறுக்கலுக்குப் பின் மிக வலிமையுடன் வருவார் .


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூன் 04, 2024 14:01

உஷ் அப்பாடா இந்த ரண களத்திலேயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குதா என்கிற மாதிரி கெஜ்ரிவால் ஜாமீனில் வெளி வந்து பிரச்சாரம் பண்ணியும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதே அவர் சிறையில் இருந்து வெளியே வராவிட்டால் அதையிட்டுதான் நான் தோத்துவிட்டேன் என்று சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது


மேலும் செய்திகள்